June 25, 2009

வாத்தியார்


மறக்க முடியாத பள்ளி/கல்லூரி நாட்களுக்கு ஆசிரியர்களும் ஒரு முக்கிய காரணம்! சிலருக்கு ஆசிரியைகள். சுவாரஸ்யமானவர்கள், சாதுவானவர்கள், வேடிக்கையானவர்கள், கோபக்காரர்கள், வசீகரமானவர்கள் என எத்தனையோ வகைகளில்..

ஆறாவது படிக்கும்போது தமிழ் வகுப்பெடுத்த சின்னத்தம்பி அய்யா. இவர் ரொம்ப வேடிக்கையாகப் பேசுவார். ஒரு முறை பிழை இல்லாமல் எழுதுவதின் அவசியத்தைப் பற்றி விளக்குகையில் ஒரு கதை சொன்னார். வெளியூரில் வேலையிலிருக்கும் தகப்பனாருக்கு மகள் கடிதம் எழுதுகிறாள். ந‌லம் விசாரிப்பு இத்யாதி இத்யாதிகளுக்குப் பிறகு இறுதியாக இப்படி எழுதுகிறாள்.
"அப்பா, வரும்போது மறக்காமல் பாடைக்குத் துணி வாங்கி வரவும்"
இதைப் படித்ததும் அதிர்ச்சியாகுமா இல்லையா? அவள் சொல்ல நினைத்தது பாவாடைக்குத் துணி. ஒரு எழுத்து விட்டுப் போனதால் எவ்வளவு அனர்த்தம்?
"அதனால் பிழையில்லாமல் எழுதுங்களடா மண்டூகங்களா!" என முடித்தார்!

அப்புறம் நாக‌ல‌ட்சுமி டீச்ச‌ர். இவ‌ர் ரிட்டைய‌ர் ஆவ‌த‌ற்கு முத‌ல் வ‌ருட‌ம் இவ‌ரிட‌ம் ப‌டித்தேன். ஆறாவது சேர்ந்த புதிது. முதல் வகுப்பிலேயே Alphabets எழுதச் சொன்னார். நானும் வேக வேகமாக Capital Letters எழுதிக் கொண்டு போய் காட்டினேன், Good இப்ப Small Letters எழுது பார்க்கலாம் என்றார். திரும்பவும் அதே வேகத்துடன் எழுதிக்கொண்டு போய் காட்டினேன், விழுந்தது அறை. ஏனென்றால் நான் எழுதிக் கொண்டு போய் காட்டியது Capital Letters ஐயே கொஞ்சம் சின்ன சைசில். ...:)
Guardian Angel என்பார்க‌ளே. இவ‌ரைச் சொல்லலாம் அப்ப‌டி.. மாண‌வ‌ர்க‌ளுக்கு க‌ல்வியை ம‌ட்டும‌ல்லாது ந‌ல்ல‌ சூழ்நிலையையும் த‌ந்த‌வ‌ர். எந்த‌க் கார‌ண‌த்துக்காக‌வும் த‌ன‌து மாண‌வ‌ர்க‌ளை விட்டுக்கொடுக்காத‌வ‌ர். ந‌ன்றாக‌ப் பாடுவார். இவ‌ரைப் பார்த்தால் ஏனோ எம்.எஸ் அம்மா போல‌வே தோன்றும் என‌க்கு.

ப‌த்தாவ‌து ப‌டிக்கும்போது வ‌குப்பாசிரிய‌ராக‌ வ‌ந்தார் அர‌ங்க‌சாமி சார். இவ‌ர் தான் த‌லை‌மையாசிரிய‌ர். ம‌னித‌ருக்கு என் மேல் அலாதிப் பிரியம். அத‌னாலேயே நான் ந‌ல்ல‌ மார்க் வாங்கினால் கூட‌ ஏன் இன்னும் அதிக‌மாக‌ வாங்க‌வில்லை என‌ அடிப்பார். க‌ண்டிப்புக்கு பெய‌ர் போன‌வ‌ர். ஒரு முறை ஒரு மாண‌வ‌னை அடிக்கும் போது அவ‌ன் ம‌ய‌ங்கிவிட‌, ம‌ய‌க்க‌ம் தெளிய‌ வைத்து திரும்ப‌வும் அடித்தார். ஆனாலும் அனைவ‌ருக்கும் பிடிக்கும் இவ‌ரை. பாவ‌ம் விப‌த்து ஒன்றில் இறந்து போனார்.

அடுத்த‌து விஜ‌ய‌ல‌ட்சுமி டீச்ச‌ர். ஆசிரியை ஒருவ‌ரை உற‌வு முறை சொல்லி அழைத்த‌து இவ‌ரைத்தான். என் வ‌குப்பில் அனைவ‌ரும் இவ‌ரை அக்கா என்று தான் அழைப்போம். இவ‌ர் வீட்டுக்கார‌ரையும் மாமா என்று தான் அழைப்ப‌து. செம Brainy.

அப்புற‌ம் காலேஜ் ப‌டிக்கும்போது சில‌ர். அந்த‌ வ‌ய‌துக்கே உரிய‌ அக்குறும்புக‌ளால் பாதிக்க‌ப்ப‌ட்ட ஆசிரிய‌ர்க‌ள் தான் அதிக‌ம். ஒரு முறை, இன்டெர்னல் மார்க் ஒழுங்கா போடுவ‌தில்லை என்ற‌ ஒரே கார‌ண‌த்துக்காக‌ ஒரு சாரை ஹாஸ்ட‌ல் ரூமில் வைத்துப் பூட்டி தாழ்ப்பாளில் ஒரு நாயையும் கொண்டு வ‌ந்து க‌ட்டி, போகிற‌வ‌ன் வ‌ருகிற‌வ‌ன் எல்லாம் அந்த‌ நாயை உசுப்பேத்திவிட்டுக் கொண்டிருந்தோம். கொஞ்ச‌ நேர‌த்தில் அந்த நாய் எங்க‌ளைப் பார்த்தாலே அல‌ற‌ ஆர‌ம்பித்த‌து. அவர் எவ்வளவு தட்டியும் யாரும் திறக்கவில்லை. அது போட்ட‌ ச‌த்த‌த்தில் அன்று அவ‌ர் தூங்கியிருப்பார் என‌ நினைக்கிறீர்க‌ள்?

{}

இன்னும் சொல்ல நினைக்கும் ஆசிரியர்கள் எத்தனையோ பேர். எல்லோரையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று தான் ஆசை. ஆனால் இயந்திர கதியில் இயங்கும் இந்த வாழ்க்கையில் யாரையென்று போய் பார்ப்பது? இந்த மாதிரி நினைவுகளை மட்டுமே பொக்கிஷமாக பாதுகாக்க முடிகிறது. ஆனால் ஒன்று. எந்த ஆசிரியரும் தன் மாணவன் தன்னை வந்து பார்ப்பதில்லையே என வருந்துவதில்லை. ஏனெனில் எனக்கு ஒரே ஒரு அரங்கசாமி, ஒரே ஒரு நாகலட்சுமி தான்! ஆனால் அவர்களுக்கு நூறு மகேஷ்கள்!

I Salute you Teachers!!!

6 கருத்து:

// மறக்க முடியாத பள்ளி/கல்லூரி நாட்களுக்கு ஆசிரியர்களும் ஒரு முக்கிய காரணம்! சிலருக்கு ஆசிரியைகள். //எனெக்கெல்லாம் எம்பட கேர்ள் ப்ரெண்ட்ஸ்தான் .....!!! அஞ்சாப்பு படிக்கிற வரைக்கும் ஒன்னு... ." பேரு சித்ரா " .. அப்புறம் , ஆறாப்பு , ஏழாப்பு க்கு " மஞ்சு " , எட்டாப்புல இருந்து பத்தாப்பு வரைக்கும் .. " ஸௌமியா "...

அப்புறம் பாலிடெக்னிக் படிக்கும் போது ... " பிசு பிசுப்பு பிரியா.... " , காலேஜ்ஜுல .. " பீனா மேதீவ் ... " கேரளத்துப் பைங்கிளி.....!!!!


// "அப்பா, வரும்போது மறக்காமல் பாடைக்குத் துணி வாங்கி வரவும்"
இதைப் படித்ததும் அதிர்ச்சியாகுமா இல்லையா? ///ஐயோ.....!!! " படிக்கும்போது நானு அப்பிடியே ஷாக் ஆயிட்டேன்..... " பயங்கர த்ரில்லிங் ..!!!


// "அதனால் பிழையில்லாமல் எழுதுங்களடா மண்டூகங்களா!" என முடித்தார்! //ஹ .. ஹ.. ஹா....!! ஐயோ.. ஐயோ...!! பயங்கரமா காமிடி பண்றாரு..!! சிருச்சு வயறு வலிக்குது மாப்ள..!!! செம காமிடி பீசு அவுரு...!!!!

// இப்ப Small Letters எழுது பார்க்கலாம் என்றார். திரும்பவும் அதே வேகத்துடன் எழுதிக்கொண்டு போய் காட்டினேன், விழுந்தது அறை. //
உன்ன கழுத்த நெருச்சு கொன்னே போட்ட்ருகொனும்...!! அந்தம்முனிக்கு தெவுரியம் பத்துல...!!! நீயி அப்பவே டீச்ச்சருகிட்ட மொக்க காமிடி பண்நீருக்குற....!!!!


// இவ‌ரைப் பார்த்தால் ஏனோ எம்.எஸ் அம்மா போல‌வே தோன்றும் என‌க்கு. //


ஏண்டா மாப்ள..... காலையில வந்ததும் சுப்ரபாதத்த அரம்பிச்சுருமா.......??


//ம‌னித‌ருக்கு என் மேல் அலாதிப் பிரியம். //போண்டாவும் , எச்சி துப்புன டீயும் வாங்கி குடுத்தா எல்லாருக்கும் அலாதி பிரியம்தான்....


// என் வ‌குப்பில் அனைவ‌ரும் இவ‌ரை அக்கா என்று தான் அழைப்போம். இவ‌ர் வீட்டுக்கார‌ரையும் மாமா என்று தான் அழைப்ப‌து. //
ஏண்டா மாப்பி....... அவிகளுக்கு மொத்தம் எத்தன புள்ளைங்க.......??? அப்பவே வெவரமாத்தாண்டா இருந்திருகுறீங்க......!!!

// ஒரு முறை, இன்டெர்னல் மார்க் ஒழுங்கா போடுவ‌தில்லை என்ற‌ ஒரே கார‌ண‌த்துக்காக‌ ஒரு சாரை ஹாஸ்ட‌ல் ரூமில் வைத்துப் பூட்டி தாழ்ப்பாளில் ஒரு நாயையும் கொண்டு வ‌ந்து க‌ட்டி, போகிற‌வ‌ன் வ‌ருகிற‌வ‌ன் எல்லாம் அந்த‌ நாயை உசுப்பேத்திவிட்டுக் கொண்டிருந்தோம். ///
அதுக்கப்புறமா திருந்தி , ஒழுக்கமா மார்க் போடா ஆரம்பிச்சானா அந்த பெட்ரமாஸ் மண்டையன்...!!!!

// இன்னும் சொல்ல நினைக்கும் ஆசிரியர்கள் எத்தனையோ பேர். எல்லோரையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று தான் ஆசை. ///எனக்கும் இன்னும் நெம்ப பேர் கேர்ள் ப்ரெண்ட்ஸ் இருந்திருக்காங்க... எல்லா கூத்தையும் சொன்னா நேரம் பத்தவே பத்தாது .....!!!
அடேய் மாப்பு ... மொதல்ல இந்த வெரிபிகேசன தூக்கு.....!!!

மாம்ஸ்.

உங்க பின்னூட்டம் பார்த்து எனக்கு சிரிப்பு தாங்க முடியல!


//

// இப்ப Small Letters எழுது பார்க்கலாம் என்றார். திரும்பவும் அதே வேகத்துடன் எழுதிக்கொண்டு போய் காட்டினேன், விழுந்தது அறை. //

உன்ன கழுத்த நெருச்சு கொன்னே போட்ட்ருகொனும்...!! அந்தம்முனிக்கு தெவுரியம் பத்துல...!!! நீயி அப்பவே டீச்ச்சருகிட்ட மொக்க காமிடி பண்நீருக்குற....!!!!
//

காமெடி எல்லாம் இல்ல. எனக்கு ஆறாவது வரை ஸ்மால் லெட்டெர்ஸ் இருக்கறதே தெரியாது. பரீட்சை எல்லாம் கேபஸ் தான்.:)

என் பதிவ விட உங்க விமர்சனம் பெரிசா இருக்கும் போலயே!

ஆமா! உங்க கேர்ள் ப்ரண்ட்ஸ் மேட்டர் உங்க வீட்டுக்காரம்மாவுக்கு தெரியுமா?

ஒவ்வொரு வரிக்கும் ஒரு பகடியா?

உம்மைப் போல் நான்கு பேர், வேண்டாம் நீர் ஒருவரே போதும், நாங்க எல்லாம் எழுதின மாதிரி தான்...:)

அருமையான, ஆசிரியர்களை
நினைவுபடுத்தும் பதிவு..
ஹூம்.. அடிச்சு ஆடுங்க!!

ஓட்டும் போட்டாச்சு!!

// கலையரசன் said...
அருமையான, ஆசிரியர்களை
நினைவுபடுத்தும் பதிவு..
ஹூம்.. அடிச்சு ஆடுங்க!!

//

நன்றி சகா!

நல்ல பகிர்வு மகேஷ்... நான் ஏற்கெனவே இது போல ஒரு பதிவு ட்ராஃப்ட்ல வச்சிருக்கேன். நீ போட்டுட்ட..
//காட்டியது Capital Letters ஐயே கொஞ்சம் சின்ன சைசில். ...:)//
அறியாத வயசு..புரியாத மனசு..
//ஒரு முறை, இன்டெர்னல் மார்க் ஒழுங்கா போடுவ‌தில்லை என்ற‌ ஒரே கார‌ண‌த்துக்காக‌ ஒரு சாரை ஹாஸ்ட‌ல் ரூமில் வைத்துப் பூட்டி தாழ்ப்பாளில் ஒரு நாயையும் கொண்டு வ‌ந்து க‌ட்டி, போகிற‌வ‌ன் வ‌ருகிற‌வ‌ன் எல்லாம் அந்த‌ நாயை உசுப்பேத்திவிட்டுக் கொண்டிருந்தோம்//
எந்த சாரை. எந்த ரூமில்.?பாவம்யா..
//ஏனெனில் எனக்கு ஒரே ஒரு அரங்கசாமி, ஒரே ஒரு நாகலட்சுமி தான்! ஆனால் அவர்களுக்கு நூறு மகேஷ்கள்!//
எனக்குள்ளும் ஒரு மனக்குறை இதுபோல் இருக்கிறது...

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More