June 24, 2009

அரட்டை : 24-06-09


1) வாதாடு மூரிலே
மாவேத மோதவே
மாலேரி மூடுதாவா

2) Was it a car or a Cat i Saw.

இந்த இரண்டு வாக்கியங்களின் சிறப்பு என்ன தெரிகிறதா?

{}

விளம்பரங்களில் இரண்டு வகை. முதல்வகை அந்த பொருளின் மதிப்பை எடுத்துக்கூறி அதனை வாங்க வைப்பது. அதன் போட்டியாளரை சண்டைக்கு இழுத்து மட்டம் தட்டி நாறடித்து எங்களுடையது தான் டாப்பு என்று விளம்பரம் செய்வது இரண்டாம் வகை. இதனை விளம்பரம் யுத்தம் எனலாம். அந்த வகையில் சமீபத்தில் கண்ணில் பட்ட இரண்டு விளம்பரங்கள் இவை. ப்ளாக்பெர்ரி ஆப்பிளை வம்பிழுப்பதும், அதற்கு ஆப்பிள் பதில் ஆப்பு வைப்பதுமாக ஒரே ரணகளம்.

ப்ளாக்பெர்ரி ஆப்பிளை நோண்டுகிறது


திருப்பியடிக்கிறது ஆப்பிள்


சபாஷ் சரியான போட்டி!

{}

அலுவலகத்திலிருந்து கிளம்பவே இரவு பதினோரு மணியாகிவிடுகிறது.வீட்டிற்கு வர Cab கொடுத்துவிடுகிறார்கள். வேலை முடிந்து எவ்வளவு சலிப்புடன் கிளம்பினாலும், நல்ல பாடல்களாக ஒட விட்டு Cool anna! சொல்ல வைத்துவிடுவார் ட்ரைவர். இளையராஜா பாடல்களாக் ஒரு கலெக்ஷன் வைத்திருக்கிறார். ஒரு மழை நாள் இரவு. அசுரத்தனமான வேகம். "ராத்திரியில் பூத்திருக்கும்" பாடல் ஓடிக்கொண்டிருக்கிறது. கேட்க கேட்க "சூப்பரா இருக்குண்ணா பாட்டு" என்றேன்.
"சும்மாவா சார்? சரக்கடிக்காமலே போதை ஏறுதே " என்றார் டிரைவர்.

ராகதேவன் ராகதேவன் தான்.

{}

மேலே சொன்ன இரு வாக்கியங்களும் பாலிண்ட்ரோம்கள் என சரியாக கண்டுபிடித்திருப்பீர்கள். முன்னாடி இருந்து படித்தாலும் பின்னாடி இருந்து படித்தாலும் ஒரே வாக்கியம் தான். தமிழில் இதற்கு மாலை மாற்று வகை என படித்ததாக ஞாபகம். திருஞானசம்பந்தர் இந்த வகையில் ஒரு பதிகமே பாடியிருக்கிறாரம்.

யாமாமாநீ யாமாமா
யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா
மாமாயாநீ மாமாயா

இப்படி ஆரம்பிக்கிறது அந்த பதிகம்.

ஆங்கிலத்தின் மிக நீளமான பாலிண்ட்ரோம் 17826 வார்த்தைகள் கொண்டதாம் (அடேங்கப்பா!)
A man, a plan, a cameo, Zena, Bird, Mocha, Prowel, a rave,
Uganda, Wait, a lobola, Argo, Goto, Koser, Ihab, Udall, a revocation,
Dunois, SECAM, Herse, Yetac, Sumatra, Benoit, a coverall, a dub, a
hire, Sokoto, Gogra, a lobo, Lati, a wadna, Guevara, Lew, Orpah,
Comdr, Ibanez, OEM, a canal, Panama!

7 கருத்து:

நன்றி.. வித்தியாசமான வார்த்தைகளை அறிமுகப்படுத்தியமைக்கு!!

// சென்ஷி said...
:)

அசத்தல்..! //

வருகைக்கு நன்றி தலைவா!

@ வருகைக்கு நன்றி தமிழினி!

// // கலையரசன் said...
நன்றி.. வித்தியாசமான வார்த்தைகளை அறிமுகப்படுத்தியமைக்கு!!//

நன்றி சகா!

தமிழிஷில் வாக்களித்து பிரபலமாக்கிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி!

அரட்டை இப்போ களைகட்ட ஆரம்பிச்சிருச்சி...நல்லா இருந்தது மேட்டர்ஸ்..
// வாதாடு மூரிலே
மாவேத மோதவே
மாலேரி மூடுதாவா//
அர்த்தம் சொல்லுப்பா...
//"சும்மாவா சார்? சரக்கடிக்காமலே போதை ஏறுதே " என்றார் டிரைவர்.//
ரசனையான டிரைவர்...
அரட்டை அமர்க்களம்..தொடர்க...

அர்த்தம்?
எனக்குப் பிரிக்கத்தான் தெரிகிறது. அர்த்தம் சரியாக விளங்கவில்லை.
தெரிந்தால் சொல்லுங்களேன்.

// ரசனையான டிரைவர்...//

:))))

நன்றி அண்ணா!

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More