
தேவதைகளும் சாத்தான்களும்... ???
போப் ஆண்டவர் திடீரென கொலை செய்யப்படுகிறார். புதிய போப்பைத் தேர்ந்தெடுக்கும் முக்கியஸ்தர்களான நான்கு கார்டினலகள் கடத்தப்படுகிறார்கள். இதே சமயத்தில், CERN ஆராய்ச்சி நிலையத்தில் உருவாக்கப்படும் ஆன்டி-மேட்டர் (கவனிக்க : Aunty matter இல்லை) just like that திருடப்படுகிறது. மூன்றுக்கும் காரணம் இலுமினாட்டி என்று சொல்லப்படுகிற ரகசிய அமைப்பு. ஒவ்வொரு மணி நேர இடைவெளியில் ஒவ்வொரு கார்டினலாகக் கொன்றுவிட்டு நள்ளிரவில் அந்த மேட்டரை வெடித்து வாடிகனையே அழிக்கப் போவதாக பயமுறுத்துகிறார்கள்.
இதனிடையே இலுமினாட்டி மர்மத்தை உடைக்க வரும் நாயகன் Prof. Robert Langdon மற்றும் ஆண்டி-மேட்டர் வயலைத் தொலைத்துவிட்டு நிற்கும் விஞ்ஞானி Vetra ஆகியோர் கார்டினல்களையும் வயலையும் சேர்த்துத் தேடத் தொடங்குகிறார்கள். அவர்களுக்கு வாடிகன் தேவாலயங்களில் உள்ள தேவதை சிற்பங்கள் வழிகாட்டுகின்றன. ஒவ்வொரு முறையும் மிகச் சரியாக கார்டினல் ஒருவர் கொல்லப்பட்ட பிறகு அந்த இடத்திற்குச் செல்கிறார்கள். இலுமினாட்டி மர்மத்தை அவிழ்க்க முடிந்ததா, வாடிகனை காப்பாற்ற முடிந்ததா என்பது பரபரப்பான மீதிக் கதை.
சும்மா சொல்லக்கூடாது. விறுவிறுப்புக்கு கொஞ்சமும் பஞ்சமில்லாத கதை. உண்மையான இலுமினாட்டி யாரென்று தெரியும்போது சுவாரஸ்யமாகத் தான் இருக்கிறது!
படத்தில் முக்கால்வாசி செட்டிங்காம்! பிரம்மிப்பாக இருக்கிறது. வாடிகனின் அழகைக் கண் முன்னே நிறுத்துகிறது.
டாம் ஹேங்க்ஸ்!!! மனிதரைப் பற்றி சொல்லவே வேண்டாம். ப்ரொஃபசராகக் கச்சிதமாக்ப் பொருந்துகிறார். கதாநாயகிகள் போல நீச்சலுடையில் அறிமுகமாகிறார்.:)
க்ரான்ட் மாஸ்டர், மேரி மேக்தலின், ப்ரையரி ஆஃப் சையன், ப்ளட் லைன், சிம்பல்ஸ் போன்ற பல விஷயங்கள் இருந்தாலும் டாவின்சி கோட் படமாக்கப்பட்ட விதத்தில் அதன் விறுவிறுப்பை இழந்திருந்தது. இங்கு இலுமினாட்டி என்ற ஒரே விஷயத்தை வைத்துக் கொண்டு விளையாடியிருக்கிறார்கள்.
படம் நன்றாக இருக்கிறது என நான் சொன்னேன். நாவல் அளவுக்கு இல்லை என நண்பன் சொல்கிறான். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
10 கருத்து:
// ஆன்டி-மேட்டர் (கவனிக்க : Aunty matter இல்லை) //
நல்ல வேல மாப்ள .. பின் குறிப்பு போட்ட..... !!!
// கதாநாயகிகள் போல நீச்சலுடையில் அறிமுகமாகிறார்.:) //
பில்லா வுல வர்ற நயன்தாரா மாதிரியா ........???
// நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? //
இதே படம் தமிழ்ல வில்லு ' னு ரீமேக் ஆயிருக்குன்னு நெனைக்குறேன்..........??
நீ என்ன சொல்லுற.......????
விமர்சனம் நல்லாதேன் இருக்குது மாப்ள........ !!! வாழ்த்துக்கள்.....!!!!
வாங்க மாம்ஸ்.. .
// நல்ல வேல மாப்ள .. பின் குறிப்பு போட்ட..... !!! //
அதான், அதான்.
// பில்லா வுல வர்ற நயன்தாரா மாதிரியா ........??? //
கிட்டத்தட்ட... )
// இதே படம் தமிழ்ல வில்லு ' னு ரீமேக் ஆயிருக்குன்னு நெனைக்குறேன்..........??
நீ என்ன சொல்லுற.......????//
வில்லு ? நக்கலடிக்காதீங்க..
// விமர்சனம் நல்லாதேன் இருக்குது மாப்ள........ !!! வாழ்த்துக்கள்.....!!!!//
நன்றி மாம்ஸ்..
நல்ல விமர்சனம்...
//கதாநாயகிகள் போல நீச்சலுடையில் அறிமுகமாகிறார்.:)
//
ஹி..ஹி...
நன்றி தமிழினி!
நன்றி தமிழ்ப்பறவை அண்ணா..
அடங்கமாட்டிங்க போல...
விமர்சனம் நல்லாயிருக்கு..
ரசித்தேன்.. தொடர்கிறேன்!!
வருகைக்கும் தொடர்வதற்கும் நன்றி கலையரசன்.
என்னதான் அருமையாகப் படமாக்கி இருந்தாலும்,நாவலில் இருப்பதை அப்படியே படமாக்க முடியாது. படத்தை விட நாவல் முழுமையான கதை அம்சத்தோடு இருந்தது. படம் பார்த்து விட்டீர்கள் அல்லவா? இனி புத்தகத்தை எடுத்து படித்துப் பாருங்கள். நிச்சயம் வித்தியாசத்தை உணர்வீர்கள்!
உண்மை தான். நாவலை அப்படியே படமாக்குவது சிரமம் தான். ப்டத்துக்கும் நாவலுக்கும் நிறையவே வித்தியாசமிருந்தது என நண்பன் கூறுகிறான்.
வருகைக்கு நன்றி கிருஷ்ணமூர்த்தி!
படம் என்னவோ சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது..
ஆனால் யூரோப்பின் சம்மர் நேரம் பார்த்து, டூரிஸ்டு சிம்பல்களை எல்லாம் பார்த்து பார்த்து எடுக்கப்படும் இதுபோன்ற படங்கள் டூரிஸத்தைகூட ஹாலிவுட் கண்ட்ரோல் செய்ய முயல்கிறதோ என்று நினைக்கவைக்கிறாது...
வருகைக்கு நன்றி செந்தழல் ரவி அவர்களே!
// ஆனால் யூரோப்பின் சம்மர் நேரம் பார்த்து, டூரிஸ்டு சிம்பல்களை எல்லாம் பார்த்து பார்த்து எடுக்கப்படும் இதுபோன்ற படங்கள் டூரிஸத்தைகூட ஹாலிவுட் கண்ட்ரோல் செய்ய முயல்கிறதோ என்று நினைக்கவைக்கிறாது.. //
இப்படி வேற ஒன்னு இருக்கா? எப்படியோ விளம்பரம் கிடைக்குதே..
Post a Comment