March 06, 2009

பொன்னியின் செல்வன்.

ஜேம்ஸ்பாண்ட் கதைளை எல்லாம் மிஞ்சும் அளவுக்கு சாகசம், காதல், வஞ்சகம், மர்மம், நகைச்சுவை என்று பல அம்சங்கள் நிறைந்த இந்த புதினத்தை அனேகமாக அனைவரும் படித்து இருப்போம். அமரர் கல்கி அவர்களின் கொஞ்சும் தமிழில் மெய்மறந்திருப்போம். குந்தவை, நந்தினி ஆகியோரைப்பற்றிய வர்ணனைகளில் லயித்திருப்போம். இந்த புதினத்தை திரைப்படமாக காண வேண்டும் என்று எண்ணியிருப்போம் (பின்னே, நந்தினி போன்ற சூப்பர் ஃபிகரை திரையில் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் யாருக்கு தான் இருக்காது?). ஆனால் இதுவரை அது நடந்தபாடில்லை. எம்.ஜி.ஆர் நடிக்க ஆசைப்பட்டார், இயக்குனர் மகேந்திரன் அவர்கள் திரைக்கதை எழுதினார், மணிரத்தினம் இயக்க ஆசைப்பட்டார் என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன். யார் தயாரிப்பது என்ற சிக்கலால் ஆசை அப்படியே நின்றிருக்கும். சன் பிக்சர்ஸ் பெரிய மனது செய்து மொக்கை படங்களை எல்லாம் தயாரிப்பதை நிறுத்திவிட்டு இதைத் தயாரிக்கலாம். 
ஆனால் படம் எடுக்க ஆகும் செலவை விட சிக்கலானது பாத்திரத்தேர்வு...  ஒன்றும் இல்லை, நந்தினி பாத்திரத்திற்கு யார் பொருத்தமாக இருப்பார்கள் என்று வீட்டில் கேட்டேன். அவ்வளவு தான். என் தாத்தா டி. ஆர். ராஜகுமாரி என்றார். நைனா மாதவி தான் என்றார். எனக்கு, ரம்யா கிருஷ்ணன் சரியாக இருந்திருப்பார் என்றேன். என் தம்பி முத்தழகு தான் சரி என்கிறான். ஒரு வீட்டுக்குள்ளேயே இவ்வளவு கற்பனைகள் இருந்தால், லட்சக்கணக்கான வாசகர்கள் மத்தியில் எவ்வளவு கற்பனை வேறுபாடு இருக்கும்? அதை அறிந்து கொள்ளும் முயற்சிதான் இந்த பதிவு. முதலில் என் தேர்வைத் தருகிறேன்.

வல்லவரையன் வந்தியத்தேவன் : வினய்
குந்தவை நாச்சியார் : அசின் 
அருள்மொழிவர்மன் : கார்த்தி
வானதி : பூஜா
பூங்குழலி : விஜய் டி.வி ரம்யா
ஆதித்த கரிகாலன் : நரேன் 
நந்தினி - மந்தாகினி தேவி : பிரியாமணி
ஆழ்வார்க்கடியான் : பிரபு
அநிருத்தர் : டெல்லி கணேஷ்
மணிமேகலை : கார்த்திகா ("கருவாப்பயா" புகழ்)
செம்பியன் மாதேவி : மனோரமா
சுந்தர சோழர் : சிவக்குமார்
வானமாதேவி : சரண்யா
பெரிய பழுவேட்டரையர் : நெப்போலியன் 
சின்ன பழுவேட்டரையர் : பசுபதி
மதுராந்தகன் : விஷால்
சேந்தன் அமுதன் : ஜெய்
கந்தமாறன் : அஜ்மல்
பார்த்திபேந்திரன் : பிரசன்னா
குடந்தை சோதிடர் : எம்.எஸ்.பாஸ்கர்
ரவிதாசன் : அதுல் குல்கர்னி

இதில் சில பேருக்கு அவர்கள் பாத்திரங்கள் குருவி தலை பனங்காய் கதைதான். இயக்குனர் பாலாவிடம் விட்டு ட்ரில் எடுத்தால் போகிறது! 

உங்களது கற்பனைகளையும் அறியத்தரலாமே?

கொசுறு: இந்த தேர்வை நண்பர்களுடன் விவாதிக்கும்போது சத்யராஜை பெரிய பழுவேட்டரையராகவும், ஒரு சேஞ்சுக்காக கவுண்டமணியை சின்ன பழுவேட்டரையராகவும் நடிக்க வைக்கலாம் சென்று சொன்னார்கள். நந்தினியை பற்றி இருவரும் விவாதிக்கும் காட்சியை எண்ணிப்பார்த்தேன். திருமதி பழனிசாமி படத்தில் கோவை சரளாவை பற்றி இருவரும் சண்டை போடும் காட்சி ஒரு நிமிடம் கண் முன் வந்து போனது.

15 கருத்து:

இதைப்பற்றி பல பதிவுகள் வந்துவிட்டன. உங்கள் முயற்சியும் நன்று.

இதையே போதை மருந்து கடத்தும் கும்பலாய் வைத்தும் ஒரு கதை வந்துள்ளது.

நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்

வாங்க முரளி கண்ணன்.

பொன்னியின் செல்வனை கலைஞர் டீவிக்காக எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள். சில எபிசோட்கள் எடுக்கப்பட்ட நிலையில், அதை போட்டுப் பார்க்கும் போது எல்லாரும் தலையில் அடித்துக் கொண்டார்களாம்.. அந்த கல்கியின் கதையோட்டத்தை சிறிதளவு கூட கைக் கொண்டு வர இயலவில்லையாம்... அதோடு அது கிடப்பில் போடப்பட்டது.

படமாக எடுப்பது ரொம்ப கஷ்டம் நண்பா. நீங்க சொல்ற நடிகர்களை பாலாகிட்ட விட்டாக்கூட இந்த படத்த எடுக்க பத்து வருஷம் ஆகும்.. புத்தகம் போல் எடுக்க முடியாது என்றுதான் நினைக்கிறேன்..

வாங்க திரு தமிழ்பிரியன், திரு. கார்த்திகைப் பாண்டியன்.
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. என்ன செய்வது? மற்ற மொழி வரலாற்று படங்களை பார்க்கும்போது இந்த புதினத்தை படமாக பார்த்துவிட மாட்டோமா என்ற ஏக்கம் வந்துவிடுகிறது.

வல்லவரையன் வந்தியத்தேவன் : Ajith
குந்தவை நாச்சியார் : Pooja
அருள்மொழிவர்மன் : madhavan
வானதி : asin
பூங்குழலி : 9thara
ஆதித்த கரிகாலன் : jayam ravi
நந்தினி - மந்தாகினி தேவி : shreya
ஆழ்வார்க்கடியான் : Dr.Vijay
அநிருத்தர் : thuklak cho
மணிமேகலை : padmapriya
செம்பியன் மாதேவி : saranya
சுந்தர சோழர் : vijayakumar
வானமாதேவி : simran
பெரிய பழுவேட்டரையர் : prakashraj
சின்ன பழுவேட்டரையர் : napoleon
மதுராந்தகன் : prithiviraj
சேந்தன் அமுதன் : vinay
கந்தமாறன் : jayam ravee
பார்த்திபேந்திரன் : madhavan
குடந்தை சோதிடர் : vennira aadai moorthy
ரவிதாசன் : kadhal thandapani


sema comedy ya irukuthilla???

வாங்க பரமார்த்த குரு!!

உண்மையிலேயே காமெடி தான்! :)

வல்லவரையன் வந்தியத்தேவன் : Ajith
குந்தவை நாச்சியார் : Jothika
அருள்மொழிவர்மன் :Surya
வானதி : asin
பூங்குழலி : saranya mohan
ஆதித்த கரிகாலன் : prakash raj
நந்தினி - மந்தாகினி தேவி : nayanthara
ஆழ்வார்க்கடியான் : M.S.Baskar
அநிருத்தர் : Prabhu
மணிமேகலை : Pooja
செம்பியன் மாதேவி : மனோரமா
சுந்தர சோழர் : vijaya kumar
வானமாதேவி : manjula
பெரிய பழுவேட்டரையர் : நெப்போலியன்
சின்ன பழுவேட்டரையர் : பசுபதி
மதுராந்தகன் : vineeth
சேந்தன் அமுதன் : simbhu
கந்தமாறன் : santhanam
பார்த்திபேந்திரன் : பிரசன்னா
குடந்தை சோதிடர் : normal father character artist
ரவிதாசன் : அதுல் குல்கர்னி

வாங்க வினோத்!

நல்ல கற்பனை! வாழ்த்துக்கள்!

உங்களின் அணைத்து post களும் அருமை!

ஏன் சொந்த கருது என்னவென்றால், எந்த நடிகர்களும் இந்த புத்தகத்தை படிக்கும் போது நம் மனதில் தோன்றும் கதாபாத்திர உருவத்தை மிஞ்ச முடியாது.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பிரசன்னா!

நீங்கள் சொல்வது உண்மை தான்.வந்தியத்தேவனையும் நந்தினியையும் பூங்குழலியையும் யாராலும் திரையில் கொண்டுவந்துவிட முடியாது தான்!

வல்லவரையன் வந்தியத்தேவன் : கார்த்தி (பிதாமகனில் சூர்யா-வை போல்)/ பிரசன்னா

கந்தமாறன் : ஜீவன் / ஜீவா

குந்தவை நாச்சியார் : பத்மா பிரியா / சங்கீதா / சமீரா ரெட்டி

அருள்மொழிவர்மன் : விக்ரம் / சூர்யா / ப்ரித்விராஜ்

வானதி : மீனாக்ஷி (கருபசாமி குத்தகைகாரர் ) / அனௌஷ்க

பூங்குழலி : ஜெனீலியா / ஸொபி கண்ணு ( பெயர் தெரிய வில்லை ) / அர்ச்சனா (நாடோடிகள்)

ஆதித்த கரிகாலன் : அர்ஜுன் / சரத் குமார்

பார்த்திபேந்திரன் : ஆர்யா / ஜெயம் ரவி

ஆழ்வார்க்கடியான் : விவேக்

அநிருத்தர் : பிரபு / S.P.ப / ஜெயராம்

மணிமேகலை : பூஜா / சிநேகா / புதுமுகம் ( கருமை நிற அழகி )

செம்பியன் மாதேவி : கே.ஆர. விஜயா

சுந்தர சோழர் : கமல் ஹாசன்

வானமாதேவி : நதியா

பெரிய பழுவேட்டரையர் : பிரகாஷ் ராஜ் / பசுபதி / ராஜ் கிரண் / இதை கமலிடம் கொடுத்தல் பிரமாத படுத்துவர் - பழுவேட்டரையர் சிவந்த நிறம் அல்ல என்றே தோன்றுகிறது / அதே சாம்யம் இது ரஜினிக்கு தக்க பாத்திரம் - கமலே வியக்கும் படி ரஜினியால் இந்த பாத்திரத்தை செய்ய முடியும் - பாவம் ரசிகர்கள் விட மாட்டார்கள்.

நந்தினி - மந்தாகினி தேவி : சிம்ரன் / அன்றியா (பச்சை கிளி முத்து சரம்) / ஹீராவை போல் ஒருவர் / ஸ்ரேயா / ரஜினி பழ்வெட்டறயனாகும் பட்சத்தில் ஆயஸ்வர்யா ராய் கூட கூப்பிடலாம்... flash பாசக்-ல் கமல் சுந்தர சோழரை மந்தாகினி (ஐஸ்) ஒரு டூயட் கூட போடலாம்

சின்ன பழுவேட்டரையர் : அருண் விஜய் / கரன் / பார்த்திபன்

மதுராந்தகன் : ஜீவா / வினை

சேந்தன் அமுதன் : ஜீவா / வினை

குடந்தை சோதிடர் : சந்தான பாரதி

ரவிதாசன் : நிதின் சத்யா / டானியல் பாலாஜி

தேவராளன் : பிரேம்ஜி

சம்புவரையர் : நாசெர்


இவர்களுக்கு சம்பளம் பேசினாலே தசாவதாரம் பட்ஜெட்டுக்கு மேல் போகும்... நான் அவ்வளவாக படங்கள் பார்ப்பதில்லை, பல தவறுகள் இருக்கும் - மாற்று யோசனைகள் சொல்லவும்.
என் அபிப்பிராயம் - lord of the rings போல ஒரே தடவையில் ஐந்து பாகங்களாக பொன்னியின் செல்வனை எடுத்து ஆய்ந்து படங்களாக வெளியிட வேண்டும்... அப்போது தன அது சிறப்பாக இருக்கும்... இதை தொலைக்காட்சியின் நெடும் தொடர் ஆகாமல் இருந்தாலே பொன்னியின் செல்வனுக்கு சிறப்பு!!!

சுவாரஸ்யமான தேர்வு ராகவ்! இந்த விஷயத்தில் மாற்று யோசனையெல்லாம் கூடாது. அது உங்களது கற்பனையை தவறு என்பது போலாகும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கற்பனை. அவ்வளவு தான்!

நீங்கள் சொன்னது போல இந்த படத்திற்கு பட்ஜெட் எங்கேயோ போய்விடும்.

ரஜினி - ஐஸ் விடாது கருப்பு போலத் தொடர்கிறது :)

வல்லவரையன் வந்தியத்தேவன் : Vijay
குந்தவை நாச்சியார் : Jothika / sneha /asin
அருள்மொழிவர்மன் :Surya / ajith
வானதி : supramaniyapuram swathi
பூங்குழலி : anuska / nayanthara
ஆதித்த கரிகாலன் : Rajinikanth
நந்தினி - மந்தாகினி தேவி : sherya/nayanthara/slim namitha!
மணிமேகலை : nadodigal ananya
பெரிய பழுவேட்டரையர் : sathyaraj

வல்லவரையன் வந்தியத்தேவன் : Ajith
குந்தவை நாச்சியார் : Asin/Aishwarya Rai
அருள்மொழிவர்மன் : Srikanth
வானதி : Priya Anand
பூங்குழலி : Rukmini/Anushka/Tamanna
ஆதித்த கரிகாலன் : Kamal/Rajni/Karthi/Surya/Arjun/Vikram
நந்தினி : Sameera Reddy
ஆழ்வார்க்கடியான் : Prabhu
மணிமேகலை : Mamta Mohandas
செம்பியன் மாதேவி : Jeya Pradha
சுந்தர சோழர் : Suman/Sathyaraj
வானமாதேவி : Sridevi
பெரிய பழுவேட்டரையர் : Ajay Ratnam
சின்ன பழுவேட்டரையர் : Nepolean
மதுராந்தகன் : Prithviraj
சேந்தன் அமுதன் : Siddharth
கந்தமாறன் : Vinay
பார்த்திபேந்திரன் : Aadhi/Prasanna

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More