December 28, 2009

சுப்பிரமணீஈஈஈஈஈஈஈ....

ஊருக்குப் போயிருந்த போது, புதிதாக வாங்கி வந்திருந்த நாய்க்குட்டிக்கு நாலைந்து செங்குளவிகளைப் பிடித்து அரைத்துப் பாலில் கலந்து கொடுத்துக்கொண்டிருந்தார் பாட்டி. செங்குளவி பால்(!) குடித்தால் நாய் சத்தமாகவும், ஆக்ரோஷமாகவும் குரைக்கும் என்பது ஐதீகம். நாய்க்குட்டிகளின் மெனு பீஃப் பிரியாணி, கருவாடு, ரத்தம் என்று நீளும். ஊரில் ஒரு வீட்டுக்கும் மற்றொரு வீட்டுக்கும் சராசரியாக 200 மீட்டர் தூரம் இருக்கும். எல்லோருக்கும் அவரவர் வயலுக்குள் வீடு. பாதுகாப்புக் காரணங்களுக்காக, நாய் குரைப்பது மூன்று வீடுகளுக்காவது கேட்க வேண்டும்! அதற்காகத் தான் இந்தக் கொலைவெறி மெனு. நாயின் குரைப்புச் சத்தத்தை வைத்து கூட அதன் ஓனர் புகழப்படுவதால் நாய்க்கு தனி கவனிப்பு இருக்கும். வீட்டில் இருப்பவர்கள் பழைய சாதம் சாப்பிட்டாலும் நாய்க்கு விருந்து தான். வீட்டுக் காவலுக்கு இரண்டு, பட்டிக் காவலுக்கு ஒன்று என எங்கள் வீட்டில் மூன்று...

December 20, 2009

அரட்டை - 21-12-2009

”நான் அவன் இல்லை...” இது ஒரு வருடத்திற்கு முன்பு மும்பைத் தீவிரவாதத் தாக்குதலில் கைது செய்யப்பட்ட கசாப்பின் இப்போதைய பல்டி. தான் இந்திப் படங்களில் நடிக்க வந்ததாகவும், படம் பார்க்க சுற்றிக் கொண்டிருந்தவனைத் தவறுதலாகக் கைது செய்துவிட்டதாகவும், AK 47 ஐப் பார்த்ததே இல்லை என்றும் கூறியிருக்கிறான். மேலும், கொஞ்ச காலத்துக்கு முன் குற்றத்தை ஒத்துக்கொண்டது போலீசுக்கு பயந்ததனால் தானாம். ரயில் நிலைய வீடியோவில் தெரிவது, தன்னை மாதிரியே இருக்கும் தீவிரவாதியாம். எதிர்பார்த்தது தான். அவனுக்கென ஒரு வழக்கறிஞர், பாதுகாப்பு, விரும்பியவாறு அசைவு உணவு என ராஜமரியாதையுடன் நடத்தினால் இதுவும் சொல்வான், இன்னும் சொல்வான். செல்லரித்துப் போன அரசியலமைப்பு! அய்யா மன்மோகன் சிங்...

December 06, 2009

உலக அழகியைக் காப்பாற்றுவோம்!

கோபன்ஹேகன் - டென்மார்க்கின் தலைநகர். உலக ஊடகங்களின் ஒருமித்தப் பார்வை இப்போது இந்த நகரத்தின் மீது தான். டிசம்பர் 8 முதல் 18 வரையிலான உலக சுற்றுச்சூழல் மாநாடு இங்கு தான் நடைபெறுகிறது. 192 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கூடி, தட்பவெப்பநிலை மாறுபாடு குறித்து விவாதிக்கிறார்கள். பெரும்பாலும் பின்வரும் விசயங்கள் விவாதிக்கப்படும். 1) கிரீன் ஹவுஸ் வாயுக்களின் வெளியீட்டைக் (குறிப்பாக வளர்ந்த நாடுகளில்) கட்டுக்குள் வைப்பது,  2) தட்பவெப்ப நிலை மாறுபாட்டைக் கட்டுக்குள் வைக்கத் தேவையான நிதியுதவி, 3) காடுகளின் அழிவைத் தடுக்க கார்பன் ட்ரேடிங் முறை. இதற்கு முன்னர் 1997 டிசம்பரில் ஜப்பானில் க்யோட்டோ ஒப்பந்தம் என்று ஒன்றைப் போட்டார்கள். அந்த ஒப்பந்தம் வளர்ந்த நாடுகளின் கிரீன் ஹவுஸ் வாயுக்களின் வெளியீட்டைக் குறைக்க வகை செய்கிறது. ஆனால் முன்னாள் நாட்டாமை அமெரிக்கா...

November 09, 2009

புராதான அதிசயங்கள் : Seven Ancient Wonders.

இப்போதைய உலக அதிசயங்கள் என்னென்ன என்று நமக்குத் தெரியும். பழங்கால அதிசயங்கள்?  பழங்கால அதிசயங்கள் எங்கிருந்தன, எப்படி அழிந்தன என்று ஒரு லுக் விடுவோம்.  இப்போது போலவே அப்போதும் ஏழு தான் (அல்லது அப்போது போலவே இப்போதும்?).  கிசா பிரமிடு :  மர்மங்களின் தேசம் என்று வரலாற்று ஆசிரியர்களால் அழைக்கப்படும் எகிப்து நாட்டில், கிட்டத்தட்ட நான்காயிரம் ஆண்டுகளாக, பிரம்மாண்டமாய் நின்று கொண்டிருக்கும் பேரதிசயம். புராதான, இடைக்கால, நவீன என்று எத்தனை பட்டியல்கள் தயாரித்தாலும் பிரமிடுகளுக்குக் கட்டாயம் ஒரு இடம் இருக்கும். துல்லியமான அதே சமயம் நுணுக்கமான கட்டட அமைப்பு இதனைத் தனித்து நிற்கச் செய்கிறது. இதனைக் கட்டப் பயன்படுத்தப்பட்ட ஒவ்வொரு...

November 04, 2009

ஊட்டி மலை ப்யூட்டி.

சோம்பலான ஒரு வியாழக்கிழமை மதியம். கேஃப்டீரியாவில் உட்கார்ந்து கொண்டு அலுவலக அப்சரஸ்களை சுவாரஸ்யமின்றி பார்த்துக் கொண்டிருக்கையில் ரகு கேட்டான் "மச்சி, ஊட்டி ட்ரிப் போலாமா?"  "ஊட்டி போர்டா, எத்தனை வாட்டி பார்க்கிறது?" தலையைத் திருப்பாமல் பதில் சொன்னான் சரவணன்.  "இல்ல மச்சி, நார்மலா பார்க்கிற இடம் வேண்டாம், காட்டுக்குள்ள போலாம், ட்ரெக் மாதிரி...  முக்குர்த்தி பார்க், வெஸ்டர்ன் கேட்ச்மெண்ட், போர்த்திமண்ட் அணை... இப்படி வித்தியாசமா இருக்கும்." இப்படித் தான் தொடங்கியது எங்கள் சரித்திரப் புகழ் பெற்ற பயணம். பத்து பேர் போவது என்று முடிவாகி, டிக்கெட், தங்குமிடம் ஆகியவை ரிசர்வ் செய்யப்பட்டன.  மங்களகரமான ஒரு சனிக்கிழமை காலை மேட்டுப்பாளையத்தை...

October 29, 2009

காந்தளூர் வசந்த குமாரன் கதை.

ராஜராஜ சோழனின் காந்தளூர்க் கடிகைப் போரைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ராஜராஜ‌ன் மெய்கீர்த்தியிலும் முதன்மையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது இந்த போர். சேர மன்னனுடன் பேச‌ அனுப்பப்பட்ட தூதுவ‌ன் ஒருவன் அவமதிக்கப்பட்டதால் வெகுண்ட ராஜராஜன் சேர நாட்டின் மீது போர் தொடுத்தான் என்பது வரலாறு. இதைப் பின்புலமாகக் கொண்டு அமரர் சுஜாதா எழுதிய நாவல் தான் "காந்தளூர் வசந்தகுமாரன் கதை" திருவனந்தபுரத்துக்கு அருகில் உள்ள விழிஞம் தான் அப்போதைய காந்தளூர். மிக முக்கியத் துறைமுகம் காந்தளூர். சேர நாட்டின் மீதான நிரந்தர வெற்றிக்கு இந்தத் துறைமுகத்தைப் பிடிப்பது முக்கியமாக இருந்தது. தவிர ராஜராஜனால் நாடுகடத்தப்பட்ட ரவிதாசன் முதலியோரும் இங்கிருந்து தான் ஒற்ற‌ர்களைத்...

October 28, 2009

குழந்தை நீ... பொம்மை நான்..

திரிகள்... நீ இல்லை என்ற நினைவிலேயே  தீர்ந்து போகுதடி என் காலம்... தெரிந்தே எரிந்து இறந்து போகும்  திரிகளைப் போல... நினைவுகள்... உன் நினைவுகள்  அத்தனை சுகமானது... கடுமையாய் உழைத்த ஒரு நாளின் இரவின் உறக்கம் போல... கவிதை... நீ கேட்காமல் போனாய்...  நான் எழுதாமல் போனேன்...  இல்லாமல் போனது ஒரு கவிதை... பொம்மை... தூக்கி எறிவதை பற்றிக் குழந்தை கவலைபடாது...  விழுவதை பற்றியோ, உடைவதை பற்றியோ பொம்மை வருத்தபடாது...  குழந்தை நீ...  பொம்மை நான்... {} இவை நண்பர் திருமுருகன் கவிதைகள். நானெல்லாம் கவிதையெழுதினால் நாடு தாங்காது என்பதாலும், என் வலைப்பூவில் கவிதை இல்லையென்றால் வரலாறு தப்பாக பேசும் என்பதாலும் அவர் கவிதைகளை இங்கே பதிகிறேன். பார்த்து போட்டு கொடுங்க சாமியோவ...

October 20, 2009

பாடம் படிக்கும் சுவர்கள்.

பாடம் படிக்க ஆரம்பித்திருக்கின்றன எங்கள் வீட்டு சுவர்களும் திண்ணைகளும். அண்ண‌ன் ம‌கள் திவ்யாவை ப்ரீ‍‍கேஜி யில் சேர்த்திருக்கிறார்கள். பல்ப‌த்தை வைத்துக்கொண்டு திண்ணை பூராவும் வ‌ட்டெழுத்துக்க‌ளாக‌ எழுதித் த‌ள்ளுகிறாள். எழுதும்போது திண்ணைக்கு பாட‌ம் எடுக்கிறாள். அவ‌ளுக்கு ம‌ட்டும் புரியும் மொழியில்... முதல் சில நாட்கள் அவள் புறப்படும் போது பார்க்க வேண்டுமே, எந்நேரமும் வெடித்து விடுபவள் போல இருப்பாள். தற்போது ப‌ழ‌கிக் கொண்டாள். அவ‌ளுக்கு உற‌வுக்கார‌க் குழ‌ந்தையின் நட்பு கிடைத்துவிட்டது. இப்பொழுது அவ‌ர்க‌ள் இருவ‌ரும் தான் வ‌குப்பில் சேர்ந்து தூங்குகிறார்க‌ளாம்.  தீபாவளிக்கு ஊருக்குப் போயிருந்த போது "அ ஆ இ ஈ" சொல்லிக் காண்பித்தாள்....

October 18, 2009

ஆதவன் - அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்..

Well, where to begin with..? சும்மா கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரென்று இருக்கிறது ஆதவன் படம் பார்த்து.அப்படி ஒரு படம். ஆக்ஷன், த்ரில்லர், ஃபேமிலி செண்டிமெண்ட், காமெடி, காதல் என்று அதில் கொஞ்சம் இதில் கொஞ்சம் எடுத்துப் போட்டு படம் எடுத்து மொத்தமாக நம் உயிரை எடுத்திருக்கிறார்கள்.  கூலிக்கு மாரடிப்பவர், சாரி, கொலை செய்பவர் சூர்யா. குழந்தைகளைக் கொன்று உடல் உறுப்புகளைத் திருடும் கூட்டத்தை பற்றி விசாரணை செய்ய அமைக்கப்பட்ட கமிஷனுக்குத் தலைவர் பரத் முரளி. முரளியைக் கொல்ல சூர்யா அனுப்பப்படுகிறார். முரளி வீட்டிலேயே வேலைக்காரனாக நுழைகிறார் சூர்யா. நாமெல்லாம் கொலை செய்யத்தான் வந்திருக்கிறார் என்று நினைப்போம். ஆனால் அவர் காப்பாற்றத் தான் வந்திருப்பார். ஏனென்றால் முரளி தான் அவர் அப்பா. என்ன குழம்புகிறதா? பயப்படாதீர்கள். அதற்கும் ஒரு ஃப்ளாஷ்-பேக் இருக்கிறது. பத்து வயது சூர்யா பத்து வயது சூர்யா என...

October 15, 2009

டயானா, ஆதித்த கரிகாலன், ரூஸ்வெல்ட், தாஜ்மகால்...

சர்ச்சை.. தொன்று தொட்டு வரும் மனிதனின் பொழுதுபோக்கு. சுவாரஸ்யமான பொழுதுபோக்கு. திரு முத்துவேலரின் சிலையைப் பேருந்து நிலையத்தில் வைக்கலாமா வேண்டாமா என்று சர்ச்சை செய்வதில் யாதொரு சுவாரஸ்யமும் இருக்கப் போவதில்லை. ஆனால் வரலாற்றில் நடந்து முடிந்த அல்லது இப்போது நடந்து கொண்டிருக்கும் ஒரு முக்கியமான விஷயத்தின் பின்னால் உள்ள சதிச்செயல் (Conspiracy) பற்றிய சர்ச்சை மிகவும் சுவாரஸ்யமானது.உதாரணத்துக்கு, தாஜ்மகாலைப் பற்றி ஒரு மின்னஞ்சல் வந்தது. அது மும்தாஜ் கல்லறை இல்லை. உண்மையில் அது ஒரு சிவன் கோவில். அது ஆக்கிரமிக்கப்பட்டு பின்பு கல்லறையாக்கப்பட்டது என படங்கள், விளக்கங்களுடன் இருந்தது அந்த மின்னஞ்சல் இருந்தது. இப்படியும் இருக்கலாமோ என்று நம்பும் அளவுக்கு...

October 13, 2009

நீலகிரி, நியூட்ரினோ, சில கேள்விகள்

நீலகிரி மாவட்டம் மசினகுடி, சிங்காரா வனப்பகுதியில் நியூட்ரினோ ஆய்வகம் ஒன்றை இந்தியா அமைக்க இருப்பதையும் அதை இயற்கை ஆர்வலர்கள் எதிர்த்து வருவதையும் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். கேட்பத‌ற்கு டொரினோ மாதிரி இருக்கிறதே, அது என்ன நியூட்ரினோ என்று வ‌லையில் தேடிப்பார்த்த‌தில் சில‌ த‌க‌வ‌ல்க‌ள் கிடைத்தன. இப்போதைக்கு ‌நியூட்ரினோ என்பது ஒரு மின்சுமை இல்லாத, ஒளியின் வேக‌த்திற்கு நெருக்க‌மாக‌ ப‌ய‌ணிக்க‌க்கூடிய‌ மிக‌ச்சிறிய (மிக மிக மிகச் சிறிய‌) துகள் என்று வைத்துக்கொள்வோம். இந்த துகள் சூரியனில் நடைபெறுகிற அணுப்பிளவு/இணைவு போன்ற செயல்பாடுகள் மூலம் இயற்கையாகக் கிடைக்கிறது. இது தவிர, இது அணு உலைகள் மூலமாகவோ அல்லது காஸ்மிக் க‌திர்க‌ளைக் கொண்டு அணுவைத் தாக்குவ‌தாலோ...

October 05, 2009

கனா கண்டேனடி தோழி....

"நைட் ஃபுல்லா கனவுல நீதாண்டா குட்டி" - காதலனைக் கொஞ்சும் காதலி."செத்துப்போன உன்ற அப்பா கெனாவுல வந்து கூப்டுறாரு" - மகனிடம் புலம்பும் மூதாட்டி"மச்சி, 2 பேப்பர் புட்டுக்குற மாதிரி கனவு வந்துச்சுடா" - நண்பனுக்கும் சேர்த்து பீதியைக் கிளப்பும் மாணவன்"கனவு காணுங்கள்" - அப்துல் கலாம்"அது ஒரு கொடுங்கனவு" - காமம் பற்றி ஒரு எழுத்தாளர். இப்படி எப்போதாவது கனவுகளைப் பற்றி நாம் பேசுவதுண்டு. ஆனால் என் தோழி சதா சர்வ காலமும் கனவைப் பற்றித் தான் பேசிக்கொண்டிருக்கிறாள். சைக்காலஜி படிக்கிறாள். "கனவுகள் பற்றிய ப்ராஜக்ட் செய்யலாம் என்று இருக்கிறேன்" என்கிறாள். கனவுகள் பற்றி அவள் சொன்ன தகவல்கள் கொஞ்சம் சுவாரஸ்யமாக இருந்தன. துரித கண்ணசைவு (Rapid Eye Movement - REM)...

October 02, 2009

டைம் மெஷினும் உன்னைப்போல் ஒருவனும்

Time Machine ???? (ரெண்டு குதிரையைக் கொண்டாந்து பூட்டுங்கப்பு)"VCR மாதிரி வாழ்க்கையிலும் ஒரு ரீவைண்ட் பட்டன் இருந்தா எவ்ளோ நல்லாருக்கும்?" அனேகமாக நம் அனைவருக்கும் இந்த எண்ணம் வந்து போயிருக்கும். ஆனால், காலப்பயணம் என்றொரு விஷயம் இன்று வரை ஒரு கனவாகவே இருக்கிறது.விஞ்ஞானிகளைக் கேட்டால் இந்த விஷயம் முடியும் என்று நிரூபிக்கப்படவில்லை, அதே சமயம் முடியாது என்றும் சொல்லிவிட முடியாது என்று மேலும் குழப்புவார்கள். அவர்களைப் பொறுத்தவரை, ஒருவர் ஒளியை விட வேகமாக, அதாவது வினாடிக்கு மூன்று லட்சம் கிலோமீட்டருக்கு மேல் பயணம் செய்ய முடிந்தால் அவர் பல தலைமுறைகளுக்குப் பிறகு உள்ள சந்ததிகளைச் சந்திக்க முடியும் என்பது தர்க்க ரீதியில் சாத்தியம். அதாவது, ஒளியை விட வேகமாக...

September 21, 2009

உன்னைப் போல் ஒருவன்...

ஏற்கெனவே "வெட்னெஸ்டே" படத்தைத் திணறத் திணறப் பார்த்துவிட்டதால் எந்தவித எதிர்பார்ப்புமின்றி தான் போனேன். ஆனால் சும்மா சொல்லக்கூடாது. மூலப்படத்தின் அந்த இயல்பு கெடாமல் ரீமேக்கியிருக்கிறார்கள். எப்படி? சூயிங்கம் மெல்லும் போலீஸ் ஆஃபீசர், மனைவியிடம் குக்கரால் அடிபடும் அப்பாவிக் கணவன், கமிஷனரிடம் புகார் கொடுக்க வரும் அந்த நடிகர் (விஜய்?) என்று ஒன்றையும் விடவில்லை. ஹ்ம்ம்ம்ம்ம்... ரீமேக். என்ன ஒன்று, தமிழில் கொஞ்சம் அரசியல் சாயம் பூசியிருக்கிறார்கள். படத்தின் ஒன்லைன் சொன்னால் கூட படம் பார்க்கும் அந்த சுவாரஸ்யம் கெடக்கூடும் என்பதால், "நோ கதை". சேட்டன் மோகன்லாலுக்கு அசால்ட்டான பாத்திரம். சென்னை நகர கமிஷனர். கமலிடம் பேச்சுவார்த்தை நடத்தும்போது, லட்சுமியை...

Pages 311234 »
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More