
ஐநூற்றுச் சொச்சம் மீனவர்கள்... ஐநூற்றுச் சொச்சம் குடும்பங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டிருக்கிறது இதுவரை. இனிமேலும் தொடராமலிருக்க, ஒரு வலையுலக யுத்தம்
*கூட்டணி பேரம், பதவிச்சண்டை என்றால் மட்டும் ஆளாய்ப் பறந்துவிட்டு, ஒரு மரணம் சம்பவித்தால் லட்சத்தைத் தூக்கியெறிந்து தற்காலிகமாக வாயை அடைப்பது இங்கு மட்டும் தான் நடக்கும். நடவடிக்கை எடுக்கக் கேட்டால் இருக்கவே இருக்கிறது கடிதங்களும் தந்திகளும்.. இதையும் மீறி யாராவது ஏதாவது கேட்டால் கடந்த ஆட்சியில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றொரு எகத்தாளப் பேச்சு.
தங்களது குடும்பங்கள் இன்னும் நூறாண்டுகள் செல்வச்செழிப்புடன் வாழ தொலைநோக்குப் பார்வையுடன் யோசிக்கும் தலைவர்கள், ஒரு சாதாரணன் சாதாரண வாழ்க்கை...