50 First Dates படம் பார்த்து இருக்கிறீர்களா ? குல்பி பிகர் Drew Barrymore நடித்த படம். ஒரு கார் விபத்தில் அம்னீஷியாவால் பாதிக்கப்படுவார். ஒவ்வொரு நாள் காலையில் எழுந்ததும் முதல் நாள் நடந்தது மறந்து விடும். அதே கதை. Barrymore க்கு பதில் நாயகன் மனோஜ். (தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் கலை வாரிசு). க்ரைம், த்ரில்லர் எல்லாம் சேர்த்து குருமா வைக்க முயற்சித்து இருக்கிறார்கள். மனோஜ் கன்னம் குழி விழ சிரிக்கிறார். படம் முழுக்க புஜ பலம் காட்டுகிறார். நாயகனின் சித்தப்பாவாக வரும் நாசர் பொசுக் என்று செத்து போகிறார். கொலைப்பழி நாயகன் மீதே விழுகிறது. யார் கொலை செய்தார்கள் என்பதே மீதிக் கதை. யார் செய்தார்கள் என தெரியும் போது சுவாரஸ்யமாக தான் இருக்கிறது. நாயகிகளாக சினேகா உல்லல் மற்றும் ரியாசென். சினேகா உல்லல் ஐஸ்வர்யா ராய் ஐ ரீ-மிக்ஸ் செய்த மாதிரி இருக்கிறார். வழக்கை விசாரிக்கும் IPS அதிகாரி அவர். விசாரணைக்கு...