October 28, 2009
குழந்தை நீ... பொம்மை நான்..
October 20, 2009
பாடம் படிக்கும் சுவர்கள்.
பாடம் படிக்க ஆரம்பித்திருக்கின்றன எங்கள் வீட்டு சுவர்களும் திண்ணைகளும். அண்ணன் மகள் திவ்யாவை ப்ரீகேஜி யில் சேர்த்திருக்கிறார்கள். பல்பத்தை வைத்துக்கொண்டு திண்ணை பூராவும் வட்டெழுத்துக்களாக எழுதித் தள்ளுகிறாள். எழுதும்போது திண்ணைக்கு பாடம் எடுக்கிறாள். அவளுக்கு மட்டும் புரியும் மொழியில்...
முதல் சில நாட்கள் அவள் புறப்படும் போது பார்க்க வேண்டுமே, எந்நேரமும் வெடித்து விடுபவள் போல இருப்பாள். தற்போது பழகிக் கொண்டாள். அவளுக்கு உறவுக்காரக் குழந்தையின் நட்பு கிடைத்துவிட்டது. இப்பொழுது அவர்கள் இருவரும் தான் வகுப்பில் சேர்ந்து தூங்குகிறார்களாம்.
தீபாவளிக்கு ஊருக்குப் போயிருந்த போது "அ ஆ இ ஈ" சொல்லிக் காண்பித்தாள். உண்மையிலேயே நான்கு எழுத்துக்கள் தான் சொன்னாள். அதற்குள் வெட்கம் வர, ஓடிவிட்டாள்.
பள்ளிக்குப் போகும் குழந்தைகள் உள்ள எல்லோர் வீட்டையும் போல, எங்கள் வீட்டிலும் பொம்மைகள் அந்தந்த இடத்தில் வைக்கப்பட்டுள்ளன. பாத்திரங்கள் சிதறாமல் இருக்கின்றன. ஆனால் எல்லோரும் அவளை மிஸ் செய்கிறார்கள். அண்ணன் வாழைத் தோப்புக்கு தண்ணீர் பாய்ச்சும்போது, அண்ணி சமைக்கும் போது, அப்பா மாட்டுக்குத் தீவனம் வைக்கும்போது, அம்மா பால் கறக்கும் போது என எப்போதும் காலைக் கட்டிக் கொண்டே சுற்றுவாள். எல்லாம் அமைதியாய் இருப்பது வித்தியாசமாக இருக்கிறதாம்.
தினமும் இதை சொல்லிக் கொடு அதை சொல்லிக் கொடு என அண்ணிக்கு வீட்டுப்பாடம் தருகிறார்களாம். அண்ணிக்கு செம கடுப்பில் இருக்கிறார்கள். ஆனால் நிம்மதியாக இருக்கும் ஜீவன்கள் எங்கள் வீட்டு ஆட்டுக்குட்டிகள். சும்மா படுத்திருக்கும் ஆட்டுக்குட்டியை தர தரவெனெ இழுத்து வந்து தண்ணீர்த் தொட்டியில் தள்ளிவிடுவாள். இப்பொழுது அவை தப்பித்தன.
இப்போது ஒரே ஒரு சிலேட், ஒரு டயரி (அண்ணிக்கு வீட்டுப்பாடம்) மட்டும் தான் கொண்டு போகிறாள். இன்னும் சில வருடங்களில் அவள் முதுகில் புத்தகச் சுமையை ஏற்றி எலும்பை உடைக்கப் போகிறார்கள். குழந்தையிலிருந்து சிறுமியாகப் போகிறாள். :(
October 18, 2009
ஆதவன் - அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்..
சும்மா கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரென்று இருக்கிறது ஆதவன் படம் பார்த்து.அப்படி ஒரு படம். ஆக்ஷன், த்ரில்லர், ஃபேமிலி செண்டிமெண்ட், காமெடி, காதல் என்று அதில் கொஞ்சம் இதில் கொஞ்சம் எடுத்துப் போட்டு படம் எடுத்து மொத்தமாக நம் உயிரை எடுத்திருக்கிறார்கள்.
கூலிக்கு மாரடிப்பவர், சாரி, கொலை செய்பவர் சூர்யா. குழந்தைகளைக் கொன்று உடல் உறுப்புகளைத் திருடும் கூட்டத்தை பற்றி விசாரணை செய்ய அமைக்கப்பட்ட கமிஷனுக்குத் தலைவர் பரத் முரளி. முரளியைக் கொல்ல சூர்யா அனுப்பப்படுகிறார். முரளி வீட்டிலேயே வேலைக்காரனாக நுழைகிறார் சூர்யா. நாமெல்லாம் கொலை செய்யத்தான் வந்திருக்கிறார் என்று நினைப்போம். ஆனால் அவர் காப்பாற்றத் தான் வந்திருப்பார். ஏனென்றால் முரளி தான் அவர் அப்பா. என்ன குழம்புகிறதா? பயப்படாதீர்கள். அதற்கும் ஒரு ஃப்ளாஷ்-பேக் இருக்கிறது. பத்து வயது சூர்யா பத்து வயது சூர்யா என பில்ட்-அப் கொடுத்தார்களே, அந்த ஃப்ளாஷ்-பேக்கிற்குத் தான்.
சரி கதை கூட ஓ.கே. ஆனால் படம்? காட்சிகளால் சொதப்பியிருக்கிறார்கள்.
சரோஜா தேவி - பாவம் அந்த அம்மா. தேமேயென்று இருந்தவரைக் கூட்டி வந்து கலாய்த்திருக்கிறார்கள். வடிவேலு சொல்வது போல எப்போதும் மேக்கப்புடன் தான் இருக்கிறார். ஒரு குமரி கொஞ்சிக் கொஞ்சிப் பேசினால் மதி மயங்கும். ஆனால் இந்த வயதிலும் அப்படியே பேசினால்? இதில் ஒரு பாட்டு வேறு.
நயன் சுமாராக இருக்கிறார். இதற்கு முன்னால் வந்த படங்களைக் காட்டிலும் சூப்பர். ஆனால் க்ளோசப்பில் பயமுறுத்துகிறார்.
முரளிக்கு சுமாரான பாத்திரம், நன்றாக நடித்திருக்கிறார். (அஞ்சலிகள்!!!)
மனோபாலா மேல் ஏதேனும் கோபம் இருந்தால் குச்சி எடுத்து நாலு அடி கொடுத்து இருக்கலாம். இப்படியா வேஸ்ட் செய்வது அவரை? அவர் பேசும் ஒரே வசனம் "சுட்டா தலை எனக்கு". வேறு எதுவும் பேசினாற் போல் ஞாபகம் இல்லை.
ரியாஸ்கான், விஜயன், அனுஹாசன், சாயாஜி ஷிண்டே, சத்யன் எல்லாம் பாவம். ஆனந்த் பாபுவா அது? சார், ரொம்ப நாள் கழித்து வந்திருக்கிறீர்கள், பார்த்து....
படத்தில் சகிக்க முடிகிற ஒரே விஷயம் வடிவேலு தான். அதுவும் வேறோன்றும் இல்லாத காரணத்தால் நன்றாக இருக்கிறதா எனத் தெரியவில்லை. டீசண்ட் காமெடி. சில இடங்களில் சிரிக்க வைக்கிறார்.
தேக்கோ தேக்கோவைத் தவிர மற்ற பாடல்கள் நன்றாக இருக்கின்றன. ஆனால் எல்லாவற்றிலும் அயன் வாசனை. பாடல் நன்றாக இருப்பதற்காக இஷ்டம் போல சொருகியிருக்கிறார்கள்.
க்ளைமாக்ஸ் படு மொக்கையாக இருக்கிறது. அந்த சண்டைக் காட்சி சகிக்கமுடியவில்லை. கே.எஸ். ரவிக்குமார் சார், ஏன் இப்படி?
ஆதவன் - பேசாமல் "பேனர்ஜி" என வடிவேலு பெயரை வைத்திருக்கலாம்.
October 15, 2009
டயானா, ஆதித்த கரிகாலன், ரூஸ்வெல்ட், தாஜ்மகால்...
October 13, 2009
நீலகிரி, நியூட்ரினோ, சில கேள்விகள்
October 05, 2009
கனா கண்டேனடி தோழி....

October 02, 2009
டைம் மெஷினும் உன்னைப்போல் ஒருவனும்

September 21, 2009
உன்னைப் போல் ஒருவன்...

ஏற்கெனவே "வெட்னெஸ்டே" படத்தைத் திணறத் திணறப் பார்த்துவிட்டதால் எந்தவித எதிர்பார்ப்புமின்றி தான் போனேன். ஆனால் சும்மா சொல்லக்கூடாது. மூலப்படத்தின் அந்த இயல்பு கெடாமல் ரீமேக்கியிருக்கிறார்கள். எப்படி? சூயிங்கம் மெல்லும் போலீஸ் ஆஃபீசர், மனைவியிடம் குக்கரால் அடிபடும் அப்பாவிக் கணவன், கமிஷனரிடம் புகார் கொடுக்க வரும் அந்த நடிகர் (விஜய்?) என்று ஒன்றையும் விடவில்லை. ஹ்ம்ம்ம்ம்ம்... ரீமேக். என்ன ஒன்று, தமிழில் கொஞ்சம் அரசியல் சாயம் பூசியிருக்கிறார்கள்.
படத்தின் ஒன்லைன் சொன்னால் கூட படம் பார்க்கும் அந்த சுவாரஸ்யம் கெடக்கூடும் என்பதால், "நோ கதை".
சேட்டன் மோகன்லாலுக்கு அசால்ட்டான பாத்திரம். சென்னை நகர கமிஷனர். கமலிடம் பேச்சுவார்த்தை நடத்தும்போது, லட்சுமியை சதாய்க்கும்போது, அதிகாரிகளை வழிநடத்தும்போது, இப்படி நிறைய "போது"களில் ரசிக்கவைக்கிறார். லட்சுமி - தலைமைச் செயலர். முதல்வரிடம் பேசும் போது பம்முகிறார். மோகன்லாலிடம் எகிறுகிறார். நிறைய ஆங்கிலம் பேசுகிறார். இளம் போலீஸ் ஆஃபீசராக வரும் அந்த இருவரும் துடிப்பாக இருக்கிறார்கள். டிவி1 ரிப்போர்ட்டராக வரும் அந்தப் பெண் யாரையாவது முறைத்துக்கொண்டே இருக்கிறார். கேப் கிடைத்தால் தம்மடிக்கிறார். அவ்வளவுதான்.... கமலைப் பற்றி? நன்றாக நடித்திருக்கிறார் என்று தனியாகச் சொல்ல வேண்டுமா? கமல் இதில் தனியாகத் தெரிவதற்கு எந்த வேலையும் செய்யவில்லை. இது நடிகரின் படமாக இல்லாமல் கதையின் படமாக இருக்கும். அதற்காகவே கமலுக்கு நன்றிகள்.
ச்சும்மா!
படத்தை ஏ மற்றும் பி செண்டர்களை மட்டும் குறி வைத்து எடுத்திருப்பார்கள் போல. படம் நெடுக தமிழில் வசனங்கள் குறைவு. அப்படியே இருந்தாலும் வேகமாக போய் விடுகிறது. அப்புறம் முதல்வர் குரல் கலைஞர் குரல் போல இல்லை? அவரையும் கலாய்த்திருக்கிறார்கள். உன்னிப்பாகக் கவனியுங்கள்.
தீவிரவாதம் பற்றி கமல் அடிக்கும் லெக்சர்களுக்கெல்லாம் கைத்தட்டல் அள்ளுகிறது.
பின்குறிப்பு : படத்தில் பாடல்களைத் திணிக்காமல், தனி ஆல்பமாக விட்டு படத்தை இரண்டு மணி நேரமாகக் குறைத்திருப்பது நல்ல முயற்சி. இனிமேல் இதுமாதிரி படங்களை எதிர்பார்க்கலாமா?
September 08, 2009
Global Warming : என்ன செய்யலாம்?
September 06, 2009
உள்ளம் கேட்குமே...