Time Machine ???? (ரெண்டு குதிரையைக் கொண்டாந்து பூட்டுங்கப்பு)
"VCR மாதிரி வாழ்க்கையிலும் ஒரு ரீவைண்ட் பட்டன் இருந்தா எவ்ளோ நல்லாருக்கும்?" அனேகமாக நம் அனைவருக்கும் இந்த எண்ணம் வந்து போயிருக்கும். ஆனால், காலப்பயணம் என்றொரு விஷயம் இன்று வரை ஒரு கனவாகவே இருக்கிறது.
விஞ்ஞானிகளைக் கேட்டால் இந்த விஷயம் முடியும் என்று நிரூபிக்கப்படவில்லை, அதே சமயம் முடியாது என்றும் சொல்லிவிட முடியாது என்று மேலும் குழப்புவார்கள். அவர்களைப் பொறுத்தவரை, ஒருவர் ஒளியை விட வேகமாக, அதாவது வினாடிக்கு மூன்று லட்சம் கிலோமீட்டருக்கு மேல் பயணம் செய்ய முடிந்தால் அவர் பல தலைமுறைகளுக்குப் பிறகு உள்ள சந்ததிகளைச் சந்திக்க முடியும் என்பது தர்க்க ரீதியில் சாத்தியம். அதாவது, ஒளியை விட வேகமாக பயணித்துவிட்டு கொஞ்சம் வேகம் குறைத்து, திரும்பவும் ஒளியின் வேகத்தில் பூமிக்கு வந்தால், சில் ஆயிரம் வருடங்கள் ஆகியிருக்குமாம். இந்த முறையில் Time Dilation, Special Relativity என ஏதேதோ கான்செப்ட்களை உபயோகிக்கலாமாம். ஆனாலும் இந்த முறையில் கடந்த காலத்துக்குப் போவது சாத்தியமில்லையாம்.
கடந்த காலத்திற்குப் போவதற்கு Wormhole என்ற ஓட்டையைப் பயன்படுத்தமுடியும் என்கிறார்கள். என்ன எழவோ, ஒரு கருமமும் புரிய மாட்டேன் என்கிறது.
கடந்த காலம் என்பது ஏற்கெனவே நடந்து முடிந்தது. கண்டிப்பாக ஒரு "நான்" இருப்பேன். இப்போது 2009ல் இருந்து இன்னொரு நான் கிளம்பி 2000க்குப் போனால் என்ன ஆகும்? இரண்டு "நான்"கள் இருப்போமா? காலப்பயணம் செய்த "நான்" கடந்த காலத்தில் இருக்கும் "என்னைக்" கொன்றுவிட்டால்.....? நிகழ்கால "நான்" என்றே ஒரு ஆள் இருக்க முடியாதே? அல்லது ஒரே ஒரு "நான்" தான் இருப்பேனா? நிகழ்காலத்து ஞாபகங்கள் இருக்குமா? என்னால் இதைத் தாண்டியெல்லாம் யோசிக்கத் முடியவில்லை. ஜித்தர்களைக் கேட்டால் அதெல்லாம் ஒன்றும் பிரச்சனையில்லை என்கிறார்கள். புத்தகம் போட்டு இந்த பாரடாக்ஸ் பற்றி விளக்குகிறார்கள். அதையெல்லாம் படிப்பது உடல்நிலைக்குக் கேடு என்பதால் அந்தப் பக்கமே போகவில்லை.
வெறும் வாயிலேயே வெள்ளாமை செய்யும் ஹாலிவுட்காரர்கள் இந்த கான்செப்ட்டை சும்மா விடுவார்களா? இதை வைத்து ஏகப்பட்டப் படங்களைச் சுட்டுத்தள்ளியிருக்கிறார்கள். "தி டைம் மெஷின்" என்று ஒரு படம். இறந்த காதலியைக் காப்பாற்ற கடந்த காலத்திற்குச் செல்கிறான் நாயகன். அந்த சந்தர்ப்பத்திலிருந்துக் காப்பாற்றினாலும், அதே நாளில் வேறொரு விபத்தில் இறந்து போகிறாள். ஆயிரம் முறை திரும்பி வந்தாலும் ஆயிரம் முறையும் இறந்து விடுவாள் எனப் புரிந்துகொண்ட நாயகன் எதிர்காலத்துக்குப் பயணிப்பது போல் கதை வரும். "தி பட்டர்ஃப்ளை எஃபெக்ட்" என்று மற்றொரு படம். இதில் இறந்த காலத்துக்குப்போய் நடந்த தவறுகளைத் திருத்துவான் நாயகன்(எனக்குப் புரிந்தவரை).
நடந்ததையோ, நடக்கப்போவதையோ மாற்றியமைப்பது சாத்தியப்பட்டால் சுவாரஸ்யமே இல்லாமல் போய்விடும் இல்லை? தவறு ஏதாவது நடந்தால் "விடு திருத்திக்கலாம்" என்ற நிலை வரும் யாருக்குத் தெரியும், கடந்த காலத்துக்குப் போய், கமலிடம் "உன்னைப் போல் ஒருவன்" படத்தில் உங்கள் காமன் மேன் கெட்டப் எடுபடவில்லை என்று கூட சொல்லலாம் :)
32 கருத்து:
ஹி...ஹி...
சுருக்கமா இருக்கு... இன்னும் கொஞ்சம் நல்லா டீடெய்லா போட்டிருக்கலாம்...
நல்ல போஸ்ட் மச்சி. நானும் டைம் மிஷின்ல போனால், வேறு நல்ல காலேஜுக்கு அட்மிஷன் வாங்கிவிட்டு போயிருப்பேன் :)
Good one..:)
நன்றி அண்ணா.
நானும் அப்படித் தான் எழுதலாம்னு இருந்தேன். ஆனா ஐன்ஸ்டீன், குவாண்டம் ஃபிசிக்ஸ், காஸ்மிக் ஸ்ட்ரிங்க்ஸ், ஸ்டீஃபன் ஹாக்கிங்க்ஸ் அப்படின்னு என்ஜினீரிங்க் பேப்பர் மாதிரி இருந்தது. அதான் மாத்திட்டேன். :)
தேங்க்ஸ் மச்சி. :)
Thanks Ammu.
ரெண்டு நான் இருந்தா என்ன பிரச்சினை?
ஒண்ணு சாதா நான், இன்னொன்னு பட்டர் நானா இருந்துட்டு போவட்டுமே!
//அதையெல்லாம் படிப்பது உடல்நிலைக்குக் கேடு என்பதால் அந்தப் பக்கமே போகவில்லை//
:)) ஹெஹெ!
என் மாப்பி ரங்காதான் லூஸு மாதிரி இதைப் பத்தியெல்லாம் பேசிகிட்டிருப்பான்! வேணும்னா நீங்களும் அவன்கிட்டே பேசிப்பாருங்க! நிறைய டீடெயிலு கிடைக்கலாம்!
ungalranga@gmail.com
வருகைக்கு நன்றி சிபி அண்ணே
// ஒண்ணு சாதா நான், இன்னொன்னு பட்டர் நானா இருந்துட்டு போவட்டுமே! //
நெனச்சேன்.
// என் மாப்பி ரங்காதான் லூஸு மாதிரி இதைப் பத்தியெல்லாம் பேசிகிட்டிருப்பான்! //
முடியல... :)
speilberg இன் Back to the future பார்த்திருக்கிறீர்களா
மகேஷ், உங்க சிந்தனையில், சுவாரஸ்யம் புதுமை ரெண்டும் இருக்கு. உபரியா செய்திகளும் இருக்கு. இது மாதிரி எழுத்து நடை சிரஞ்சீவி பெற்றது. எக்காலத்தும் இளமையாக இருக்கும். வாழ்த்துக்கள்.
http://kgjawarlal.wordpress.com
மகேஷ், டைம் மிஷன் பத்தி விரிய புரிஞ்சிக்கலாம்னு நினைச்சேன், ரொம்ப சாதாரணமா முடிச்சிட்டிங்க. எனி ஹொவ் நல்லாருந்துச்சி...
பிரபாகர்.
நல்லா எழுதியிருக்கீங்க மகேஷ்!...
ஜவஹர்ஜி சொல்லியிருக்கறா மாதிரி திரும்ப எப்ப எடுத்து படிச்சாலும் உபயோகப்படுற எழுத்துக்கள் ரொம்ப குறைஞ்சுட்டு வர்ற நேரத்துல உங்கள மாதிரியான பதிவர்களின் இடுகைகள் ஆறுதல்!!
//நான்" கடந்த காலத்தில் இருக்கும் "என்னைக்" கொன்றுவிட்டால்.....?//
கிலியா இருக்கு
கடைசியா வச்ச உள்குத்து எனக்கு பிடிச்சிருக்கு மகேஷ்!!
நன்றாக உள்ளது மகேஷ், Time Machine வரிசையில் Back to the Future 1,2,3 யை விட்டு விட்டீர்களே
நல்லா எழுதியிருக்கீங்க!
கமல்ட மட்டுமா சொல்லணும்?!
இல்லை தர்ஷன். இனி தான் பார்க்க வேண்டும்
// Jawarlal said...
மகேஷ், உங்க சிந்தனையில், சுவாரஸ்யம் புதுமை ரெண்டும் இருக்கு. உபரியா செய்திகளும் இருக்கு. இது மாதிரி எழுத்து நடை சிரஞ்சீவி பெற்றது. எக்காலத்தும் இளமையாக இருக்கும். வாழ்த்துக்கள். //
பெரிய வார்த்தைகள். அன்புகும் வாழ்த்துக்கும் நன்றி ஜி.
// பிரபாகர் said...
மகேஷ், டைம் மிஷன் பத்தி விரிய புரிஞ்சிக்கலாம்னு நினைச்சேன், ரொம்ப சாதாரணமா முடிச்சிட்டிங்க. எனி ஹொவ் நல்லாருந்துச்சி... //
நன்றி பிரபாகர்.
// சென்ஷி said...
நல்லா எழுதியிருக்கீங்க மகேஷ்!...
ஜவஹர்ஜி சொல்லியிருக்கறா மாதிரி திரும்ப எப்ப எடுத்து படிச்சாலும் உபயோகப்படுற எழுத்துக்கள் ரொம்ப குறைஞ்சுட்டு வர்ற நேரத்துல உங்கள மாதிரியான பதிவர்களின் இடுகைகள் ஆறுதல்!! //
மிக்க நன்றி ஜி. பெரிய வார்த்தைகள்.
// சின்ன அம்மிணி said...
கிலியா இருக்கு //
:)
வாங்க கலை.
// கடைசியா வச்ச உள்குத்து எனக்கு பிடிச்சிருக்கு மகேஷ்!! //
ஹி ஹி ஹி
// S J T Raja said...
நன்றாக உள்ளது மகேஷ், Time Machine வரிசையில் Back to the Future 1,2,3 யை விட்டு விட்டீர்களே //
வாங்க ராஜா. நான் இன்னும் பார்க்கவில்லை. அதான்
// ஷங்கி said...
நல்லா எழுதியிருக்கீங்க! //
நன்றி ஷங்கி.
// கமல்ட மட்டுமா சொல்லணும்?! //
:))))))))))))))
டைம் மெஷின்ல பழைய காலத்துக்கு போக முடியும்னு நினைச்சேன்.
ஏற்கனவே பல இடங்களில் பல தகவல்களை படித்திருந்தாலும் சுவாரசியமாக சொல்லியிருக்கிறீர்கள் உங்கள் பார்வையை.
அப்புறம் உங்கள் பெயரில் இன்னொரு பிரபல பதிவர் துக்ளக் மகேஷ் இருக்காரே? இனிஷியலாவது சேற்த்துக்கொள்ளலாமே.. ஊஹூம் மாட்டேன் நான் சீனியர்னு சண்டை போடுவீங்களா? ஹிஹி..
வாங்க பின்னோக்கி.
இந்த கான்செப்ட்லாம் இன்னும் கான்செப்ட்டாவே இருக்கு. முடியும்னோ முடியாதுனோ இன்னும் யாரும் ப்ரூவ் பண்ணல
// ஆதிமூலகிருஷ்ணன் said...
ஏற்கனவே பல இடங்களில் பல தகவல்களை படித்திருந்தாலும் சுவாரசியமாக சொல்லியிருக்கிறீர்கள் உங்கள் பார்வையை. //
நன்றி தல.
// அப்புறம் உங்கள் பெயரில் இன்னொரு பிரபல பதிவர் துக்ளக் மகேஷ் இருக்காரே? இனிஷியலாவது சேற்த்துக்கொள்ளலாமே.. ஊஹூம் மாட்டேன் நான் சீனியர்னு சண்டை போடுவீங்களா? ஹிஹி.. //
சண்டையெல்லாம் போட மாட்டேன். தவிர அவர் தான் என்னை விட சீனியர். அப்புறம் அவர் Maheஷ். நான் மகேஷ். சோ, பேரை மாத்திக்கிற ஐடியா லேது. :)))))))
Post a Comment