திரிகள்...
நீ இல்லை என்ற நினைவிலேயே
தீர்ந்து போகுதடி என் காலம்...
தெரிந்தே எரிந்து இறந்து போகும்
திரிகளைப் போல...
நினைவுகள்...
உன் நினைவுகள்
அத்தனை சுகமானது...
கடுமையாய் உழைத்த ஒரு நாளின்
இரவின் உறக்கம் போல...
கவிதை...
நீ கேட்காமல் போனாய்...
நான் எழுதாமல் போனேன்...
இல்லாமல் போனது ஒரு கவிதை...
பொம்மை...
தூக்கி எறிவதை பற்றிக்
குழந்தை கவலைபடாது...
விழுவதை பற்றியோ,
உடைவதை பற்றியோ
பொம்மை வருத்தபடாது...
குழந்தை நீ...
பொம்மை நான்...
{}
இவை நண்பர் திருமுருகன் கவிதைகள். நானெல்லாம் கவிதையெழுதினால் நாடு தாங்காது என்பதாலும், என் வலைப்பூவில் கவிதை இல்லையென்றால் வரலாறு தப்பாக பேசும் என்பதாலும் அவர் கவிதைகளை இங்கே பதிகிறேன். பார்த்து போட்டு கொடுங்க சாமியோவ்.
8 கருத்து:
கவிதைகள் நல்லாயிருக்கு.போட்டுக்கொடுங்க சாமியோவ்...(recomendation!)
சூப்பர் கவிதைகள்.
//நினைவுகள்...
உன் நினைவுகள்
அத்தனை சுகமானது...
கடுமையாய் உழைத்த ஒரு நாளின்
இரவின் உறக்கம் போல//
அடிச்சுப்போட்ட மாதிரி தூக்கம் வருதுன்னு சொல்வாங்க. நினைவுகள் சுகமா அடிச்சிருச்சோ :)
இவை நண்பர் திருமுருகன் கவிதைகள். நானெல்லாம் கவிதையெழுதினால் நாடு தாங்காது என்பதாலும், என் வலைப்பூவில் கவிதை இல்லையென்றால் வரலாறு தப்பாக பேசும் என்பதாலும் அவர் கவிதைகளை இங்கே பதிகிறேன். பார்த்து போட்டு கொடுங்க சாமியோவ்.
//
சிறப்பான வரிகள்!!! ஹி!! ஹி!!!
//கவிதை...
நீ கேட்காமல் போனாய்...
நான் எழுதாமல் போனேன்...
இல்லாமல் போனது ஒரு கவிதை...//
தொலைந்துப்போனது ஒரு கவிதை....
இரண்டாம் கவிதையை மிக ரசித்தேன்.
எல்லாமே நண்பர் திருமுருகன் வரிகள் என்பதால் அவருக்கும், அதை பகிர்ந்தகொண்ட உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.
@ நன்றி வேல்ஜி.
@ நன்றி அம்மணி
@ நன்றி தேவன் மாயம்
@ நன்றி பாலாசி
valai poo miga arumai....thavarugal illamal tamizhlil oru valai poo.... ungal muyarichiku enn vaalthukal....tanglish therivipadharku mannikavum mannikkavum......thirumurugan
ஒத்து வரவில்லை என்றாலும்...
ஒன்றாகவே இருக்கிறோம்...
வாடகை வீட்டு வாழ்கை போல...
எல்லாம் தெரிந்திருந்தும்...
பாராமல் போகிறாயே...
தேர்தலுக்கு பின் தெரியாமல் தொகுதிக்கு வந்து விட்ட எம்.எல்.ஏ போல...
நன்றி திரு.
Post a Comment