"நைட் ஃபுல்லா கனவுல நீதாண்டா குட்டி" - காதலனைக் கொஞ்சும் காதலி.
"செத்துப்போன உன்ற அப்பா கெனாவுல வந்து கூப்டுறாரு" - மகனிடம் புலம்பும் மூதாட்டி
"மச்சி, 2 பேப்பர் புட்டுக்குற மாதிரி கனவு வந்துச்சுடா" - நண்பனுக்கும் சேர்த்து பீதியைக் கிளப்பும் மாணவன்
"கனவு காணுங்கள்" - அப்துல் கலாம்
"அது ஒரு கொடுங்கனவு" - காமம் பற்றி ஒரு எழுத்தாளர்.
இப்படி எப்போதாவது கனவுகளைப் பற்றி நாம் பேசுவதுண்டு. ஆனால் என் தோழி சதா சர்வ காலமும் கனவைப் பற்றித் தான் பேசிக்கொண்டிருக்கிறாள். சைக்காலஜி படிக்கிறாள். "கனவுகள் பற்றிய ப்ராஜக்ட் செய்யலாம் என்று இருக்கிறேன்" என்கிறாள். கனவுகள் பற்றி அவள் சொன்ன தகவல்கள் கொஞ்சம் சுவாரஸ்யமாக இருந்தன.
துரித கண்ணசைவு (Rapid Eye Movement - REM) என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். தூங்கும் போது மூடிய இமைகளுக்குள் கண் அசைவது. அந்த சமயத்தில் கனவு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்று அர்த்தமாம். யாரோ ஒருத்தர் ஏதோ ஒரு ஆராய்ச்சி செய்யும் போது அவருடைய பேஷண்ட் தூங்கும் போது கண்ணைக் கண்ணை உருட்டியிருக்கிறார். எழுப்பிக் கேட்கவும் தான் இது தெரிந்திருக்கிறது. இந்த REM ன் போது உடல் வெப்பநிலை, இதயத்துடிப்பு எல்லாம் விழித்திருக்கும்போது இருந்த மாதிரியே இருந்ததாம்.
நாம் எல்லோரும் கனவு காண்கிறோம். தினமும் கனவு காண்கிறோம். ஆனால் 90 சதம் கனவுகள் நினைவில் இருப்பதில்லை. எழுந்து 5 நிமிடங்களுக்குள் மறந்துவிடுகின்றன. ஆனாலும் சில மேதைகளின் கண்டுபிடிப்பு / கவிதைகளுக்கு கனவு தான் இன்ஸ்பிரேஷனாக இருந்திருக்கிறது.
கருப்பு வெள்ளையில் கனவு காணும் காலமெல்லாம் மலையேறிப் போய்விட்டது. இப்போதெல்லாம் கனவு கலரிலேயே ரிலீஸ் ஆகிறது.
கோபம், துக்கம் போன்ற எதிர்மறை உணர்வுகள் தான் பெரும்பாலான கனவுகளில் வருகின்றன.
ஆண்களின் கனவுகள் பெரும்பாலும் மற்ற ஆண்களைப் பற்றியது. அதே சமயம் பெண்களின் கனவுகளில் ஆண்களும் பெண்களும் சமமான அளவில் வருகிறார்கள்.
இன்னொரு விஷயம், கனவு காணும்போது நமது கை கால்கள் தற்காலிகமாக செயலிழக்கச் செய்யப்படுகின்றன. கனவுல் நடப்பதற்கு கையைக் காலை ஆட்டி எதிர்வினை செய்யாமலிருப்பதற்காகவாம். பாம்பு துரத்துகிறது என்று எழுந்து ஓடிவிடக் கூடாது அல்லவா?
உண்மையில் கனவுகள் உணர்ச்சிகளின் வடிகால்கள். தேவையில்லாத நினைவுகளை நீக்குவதற்காக இயற்கை அளித்த கொடை. கனவு காணும்போது பாதியில் எழுந்தவர்கள் / எழுப்பப்பட்டவர்களுக்கு மன உளைச்சல் வரலாம் என்கிறார்களாம் விஞ்ஞானிகள்.
ஆனால் கனவு என்பது என்ன? எங்கிருந்து வருகிறது? என்ற கேள்வியை பாஸ் செய்துவிட்டாள்.
எல்லாம் சொல்லிவிட்டு சொன்னாள். "Max, you know what? சராசரியா நமக்கு டெய்லி சிக்ஸ் ட்ரீம்ஸ் வருது"
"அப்படியா? எனக்கு செக்ஸ் ட்ரீம்ஸ் தான் வரும்" என்று சொல்ல நினைத்தேன், சொல்லவில்லை.
டிஸ்கி : தலைப்பிலிருக்கும் தோழிக்கும் சைக்காலஜி படிக்கும் தோழிக்கும் சம்பந்தம் இல்லை :)
12 கருத்து:
//னவு காணும்போது நமது கை கால்கள் தற்காலிகமாக செயலிழக்கச் செய்யப்படுகின்றன. கனவுல் நடப்பதற்கு கையைக் காலை ஆட்டி எதிர்வினை செய்யாமலிருப்பதற்காகவாம். பாம்பு துரத்துகிறது என்று எழுந்து ஓடிவிடக் கூடாது அல்லவா?
//
சோ, கையை காலை கட்டி போடத்தேவையில்லைன்னு சொல்றீங்க.... நல்ல தகவல்கள் மகேஷ்... கலக்குங்கள்... பிரபாகர்.
அண்ணே, நீ ஜா(ஜோ)தின்ணே..!
:-)
//"அப்படியா? எனக்கு செக்ஸ் ட்ரீம்ஸ் தான் வரும்" //
சேம் ஃபிளட்!!
ஹை, நானும் கூட போன மாசம்தான் கனவு பத்தி பதிவு போட்டேன்.
// கலையரசன் said...
//"அப்படியா? எனக்கு செக்ஸ் ட்ரீம்ஸ் தான் வரும்" //
சேம் ஃபிளட்!!//
என் இனமடான்னு சொல்ல ஒரு கூட்டமே வரும்போலிருக்கு :)
கலக்கல் பதிவு மகேஷ்...ரியல்லி...
கனவு பத்தி நிறைய தகவல்கள்.
/துரத்துகிறது என்று எழுந்து ஓடிவிடக் கூடாது அல்லவா?
:-))
@ நன்றி பிரபாகர்
@ ஆமாங்க டக்ளஸ் தம்பி
@ சேம் ப்ளட் கலை... :)
// சின்ன அம்மிணி said...
என் இனமடான்னு சொல்ல ஒரு கூட்டமே வரும்போலிருக்கு :) //
:)))))))))
@ நன்றி பரணி அண்ணா!
@ நன்றி பின்னோக்கி
சைக்காலஜியில் எனக்கு நிறைய ஆர்வம் நிறைய எழுதுங்க தல!
// வால்பையன் said...
சைக்காலஜியில் எனக்கு நிறைய ஆர்வம் நிறைய எழுதுங்க தல! //
நன்றி தல... ஆனா எனக்கு சைக்காலஜி தெரியாதே... கேட்டு வேணும்னா ட்ரை பண்றேன்.
நல்ல சிந்தனை. பலே!!
Post a Comment