ஓரினச்சேர்க்கை உறவு சட்டவிரோதம் இல்லை என்று டெல்லி உயர்நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பளித்துள்ளது.
ஓரினச்சேர்க்கை சட்டவிரோதம் எனக் கூறி வந்தது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 377 வது பிரிவு. அன்புமணி ராமதாஸ் சுகாதார அமைச்சராக இருந்தபோதே இந்த சட்டத்தை நீக்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால் எதிர்ப்புகள் வலுக்கத்தொடங்கியதாலோ என்னவோ அப்போதைக்கு கைவிடப்பட்டது. தற்போது அந்த சட்டப்பிரிவு செல்லாது என்று தீர்ப்பளித்திருக்கிறது நீதிமன்றம்! ஒவ்வொரு குடிமகனுக்கும் தனி மனித உரிமைகள் / விருப்பம் போல வாழ்வு இத்யாதி இத்யாதிகளைப் பற்றி பேசுகிறது அரசியல் சட்டத்தின் 21வது பிரிவு. ஆனால் அதை தடுக்கும் வகையில் 377வது சட்டப் பிரிவு உள்ளது. எனவே இது செல்லாது என்று கூறப்பட்டுள்ளது. எனினும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் சட்டத்தில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது.
கிட்டத்தட்ட 25 லட்சம் பேரைக் கொண்ட இந்த மைனாரிட்டி சமூகத்தின் தனி மனித உரிமைகள் இந்த 377 வதி பிரிவினால் பாதிக்கப்படுகின்றன. மூன்றாம் பாலினம் என்ற விஷயத்தை அங்கீகரிக்கும் சமூகம் தனி மனிதனின் Sexual Orientation ஐ தேர்ந்தெடுக்கும் உரிமையை மட்டும் மறுப்பது நியாயமில்லை. தவிர ஹோமோசெக்ஷூவாலிட்டி என்பது மரபணு /ஹார்மோன் சார்ந்த விஷயம். இதைக் குற்றமாக்குவது என்பது ஒருதலைப் பட்சமானது. இதனை சட்டப்பூர்வமாக்குவதால் எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தயங்காமல் சிகிச்சைக்கு வருவார்கள். இவ்வாறான வாதங்களை எடுத்து வைக்கிறது ஒரு தரப்பு.
"இல்லை, இது ஒரு வக்கிரமான மன நோய். அருவருக்கத் தக்க விஷயம். இயற்கைக்கு புற்ம்பான செயல். இந்த செயலை குற்றமில்லை என அறிவிப்பது. ஓரினச்சேர்க்கையை ஊக்குவிப்பதாக அமையும். பொதுஜனங்களிடம் பாலியல் சில்மிஷம் அதிகமாகும். குழந்தைகளுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகள் பெருகும். எய்ட்ஸ் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கும். குடும்ப அமைப்புகள் முறைகெட்டுப்போகும். ஒருவனுக்கு ஒருத்தி என்ற அற்புதமான கட்டுப்பாடு (இன்னும் வழக்கில் இருக்கிறதா என்ன?) காற்றில் பறக்கவிடப்படும். இந்தியாவின் உலகப்புகழ் வாய்ந்த கலாச்சார கூறுகள் சீரழியும்." என்றெல்லாம் வாதிடுகிறது இன்னொரு தரப்பு.
இதனிடையே மத்திய அரசு "ஓரினச்சேர்க்கையை ஆதரிப்பது ஒழுக்க விதிகளுக்குப் புறம்பானது. நாகரிகமான வாழ்க்கை முறைகள் பாதிக்கப்படும். பெரும் சுகாதார அச்சுறுத்தலாக அமையும்" என்று கூறியுள்ளது.
கலாச்சாரம் எல்லாம் காற்றில் பறக்கவிடப்பட்டு ரொம்ப நாளாகிவிட்டது. இந்த விஷயம் தான் கலாச்சாரத்தை சீர்குலைக்கும் என்பதெல்லாம் வெறும் வாதம். ஆனால் இந்த தீர்ப்பை முன் மாதிரியாகக் கொண்டு தொந்தரவுகளும் குற்றங்களும் நடைபெறாமல் போதும். என்று எதிர்பார்க்கிறது என்னை மாதிரியான அன்றாடங்காய்ச்சித் தரப்பு!
குறிப்பு : ஆரோக்கியமான விவாதங்கள் வரவேற்கப்படுகின்றன.
10 கருத்து:
மாப்ள .... பதிவு.... கும்முன்னு இருக்கு.......!! உட்டா அரசியல்ல யரங்கீருவியாட.....!!!!
அமேரிக்கா , பிரான்ஸ் , ஜெர்மனி , ஆஸ்துரேலியா போன்ற நாடுகளில் இந்த ஊறின சேர்க்கைக்கு முழு சுதந்திரம் உண்டு...!!! அங்கு ஓரின செர்க்கையாலர்க்கென தனி மதுபான விடுதிகள் , உணவு விடிதிகள் , தாங்கும் உல்லாச விடுதிகள் , கடற்க்கரை
( கே பீச் ( gay beech ) ) என எல்லா வசதிகளும் உண்டு .
அவர்களுக்கென தனி ஏழு வர்ண ( வானவில் வர்ணங்கள் ) கொடி உண்டு...!! அவர்கள் ஊர்வலம் செய்ய முழு சுதந்திரம் உண்டு...!! இது காலபோக்கில் அங்கு இதை யாரும் பெரிது படுத்துவதில்லை .... !!!
இது போல நம்ம கொல்கத்தாவிலும் ஏழு வர்ண கொடி கொண்டு ஓரினச் சேர்க்கையாளர்கள் இரு வருடங்களுக்கு முன்பு உரிமைக்காக ஊவலம் நடத்த முற்ப்பட்டனர். ஆனால் அதற்க்கு கடும் எதிப்புகள் கிளம்பியதால் ... தடை செய்யப் பட்டது.. !!
ஓரினச் சேர்க்கை எனபது இந்தியாவில் புதிதல்ல.... !! பண்டைய மன்னர்கள் காலத்தில் இருந்தே இருக்கிறது....!! ஆனால் இந்திய கலாச்சாரத்துக்கு புறம்பானது என்று காலபோக்கில் அது அருவருக்கத் தக்க ஒன்றாக தடை செய்யப்பட்டது...!!!
சில கோவில் சிற்பங்களில் கூட ஓரினச் சேர்க்கை உருவங்கள் பொறிக்கப் பட்டிருக்கும்..!! ஒரு எடுத்துக் காட்டாக , ஈரோடு அருகே உள்ள சென்னிமலையில் மலை முருகன் கோவில் உள்ளது...!! அங்கு அம்பாள் சந்நிதி கோபுரத்தில் ஓரின சேர்க்கை கொண்டுண்டுள்ளதுபோல் இரு ஆண்கள் உருவ சிலைகள் உண்டு...!! இது மிகவும் பழமையான கோவில்களில் ஒன்று....!!!!
சிறந்த எடுத்துக் காட்டாக " அலெக்சாண்டர் " மன்னன் ஒரு ஓரினச் சேர்க்கை பிரியர்..!! அவர் பல மயிகள் தூரம் சென்று பல நாடுகளை கை பற்றியவர்....!! ஆதலால் பல காலங்கள் படை வீரர்கள் பயணத்திலேயே போய்விடுவதால் .. அவர் படை வீரர்களை ஓரினச் சேர்க்கைக்கு உட்படுத்தினார்...!!
இப்பொழுது கூட ஓரினச் சேர்க்கையாளர்களின் முத்திரையில் அலெக்சாண்டரின் படம் இருக்கும்...!! அவர்தான் ஓரினச் சேர்க்கையாளர்களின் இச்சட்ட அரசர்...!!!
நம்ம நாட்டல ஓரினச் சேர்க்கையாளர்களின் எண்ணிக்கை குறைவு என்று மட்டும் நீ தவறான கணிப்பு போட்டுவிடக்கூடாது...!!! கலாச்சாரம் , சட்டம் , சுற்றம் ... இதைக் கொண்டு யாரும் அவர்களின் உள்ள மனோபாவங்களை வெளி கொணர்வதில்லை...!!!!
நம்ம நாட்டில் சரியான கல்வியறிவின்மை , மூட பழக்க வழக்கங்கள் இதனாலேயே குழந்தைகளிடம் சில்மிஷங்கள் போன்றவை நேரிடுகின்றன..!! படித்த சில மூர்கர்களும் இதில் ஈடுபடுகின்றனர்...!! இதற்க்கு கடும் தண்டனை ( துபாய் போல ) கொடுக்கவேண்டும்...!!! பேருந்தில் பயம் செய்யும் பொது... கைய்யை சொரண்டுவது ... , காலை சொரண்டுவது.... இது போல சில்மிஷங்களையும் சில மிருகங்கள் ஈடுபடுகின்றனர்....!! இதற்கும் அதே போல் தண்டனை கொடுக்க வேண்டும்....!!!
இரு ஓரினச் சேர்க்கையாளர்கள் மனம் ஒன்றி வாழ்வதில் , என்னை பொறுத்தவரை தவறொன்றுமில்லை என கருதுகிறேன்.....!!!!! இதற்க்கு கலாச்சாரம் , மண்ணாங்கட்டி எதுவும் தடை இல்லை ....!! கலாச்சாரம் எப்பொழுதோ கேட்டு விட்டது....!! இந்த சட்டம் வந்த பிறகுதான் கேதேம் என்று சொல்லும் அறிவற்றவர்கள் வீண் அரசியல் பண்ணுவதாகவே கருதப்படுகிறது....!!!
என் ஆதரவு இதற்க்கு : 75% ( கண்ணியம் , கட்டுப்பாடு , தூய்மையுடன் இருந்தால் )
தகவல்களுக்கும் கருத்துக்கும் நன்றி மாம்ஸ்!
// இதற்க்கு கலாச்சாரம் , மண்ணாங்கட்டி எதுவும் தடை இல்லை ....!! கலாச்சாரம் எப்பொழுதோ கேட்டு விட்டது....!! இந்த சட்டம் வந்த பிறகுதான் கேதேம் என்று சொல்லும் அறிவற்றவர்கள் வீண் அரசியல் பண்ணுவதாகவே கருதப்படுகிறது....!!! //
:))))
இதற்கு அங்கீகாரம் இந்திய சமூக சூழலில் சரியா என்று தெரியவில்லை. முன்பெல்லாம் இரவு நேரப் பயணத்தில் கூச்சமில்லாமல் தூங்குபவர்களின் தொடைக்கு இடையே கையை நுழைப்பவர்கள், இனி கூச்சமின்றி விருப்பம் இருக்கா இல்லையான்னு வெளிப்படையாகக் கேட்டு விளையாட முயற்சிப்பாங்க. இரவு பயணிகளுக்கு சங்கடம் தான்.
என்னத்தைச் சொல்வது !
ஹூம்
வருகைக்கு நன்றி கோவி அண்ணா!
// முன்பெல்லாம் இரவு நேரப் பயணத்தில் கூச்சமில்லாமல் தூங்குபவர்களின் தொடைக்கு இடையே கையை நுழைப்பவர்கள், இனி கூச்சமின்றி விருப்பம் இருக்கா இல்லையான்னு வெளிப்படையாகக் கேட்டு விளையாட முயற்சிப்பாங்க. இரவு பயணிகளுக்கு சங்கடம் தான். //
சங்கடம் தான். தொந்தரவு பண்ணாமல் இருந்தால் சரி!
ஹூம்
திரையரங்குகளில் காலைத் தடவுபவர்களாலும், பேருந்துகளில் உரசுபவர்களாலும் பெரிய துயரமாக இருக்கின்றதாம். இருபால் உறவையும் தடை செய்துவிடுவோமா அண்ணாச்சி..
ஒரிணச்சேர்க்கையாளர்கள் என்றாலே பேருந்து பேருந்தாக அலைபவர்கள் என்ற ஒற்றை பரிமாணத்திலிருந்து வெளியே வாங்க அண்ணாச்சி
//
கோவி.கண்ணன் said...
இதற்கு அங்கீகாரம் இந்திய சமூக சூழலில் சரியா என்று தெரியவில்லை. முன்பெல்லாம் இரவு நேரப் பயணத்தில் கூச்சமில்லாமல் தூங்குபவர்களின் தொடைக்கு இடையே கையை நுழைப்பவர்கள், இனி கூச்சமின்றி விருப்பம் இருக்கா இல்லையான்னு வெளிப்படையாகக் கேட்டு விளையாட முயற்சிப்பாங்க. இரவு பயணிகளுக்கு சங்கடம் தான்.
என்னத்தைச் சொல்வது !
ஹூம்
//
மகேஷ்... சீரியஸான பதிவாக இருக்கிறது. நல்ல பகிர்வு.
லவ்டேல் மேடியின் கருத்துக்களும் ஒத்துக்கொள்ளும்படியாக இருக்கிறது கொஞ்சம் எழுத்துப்பிழைகளைத் தவிர்த்துப் பார்க்கையில்...
கோவி கண்ணன் சொன்னது போல் நடக்கவும் வாய்ப்பிருக்கிறது:-((
கேம்பஸ் இண்டர்வியூவில் குரூப் டிஸ்கசனில் பாயிண்ட் இல்லாதபோது பேசுபவன் போல் பின்னூட்டமிட்டுவிட்டேன்...
இந்த அரசியல், சட்டம்,ஒழுங்கு இதெல்லாம் நமக்கு ஆகாத டாபிக்...
இந்த ஏரியாவில தானும் தூங்க மாட்டான்.அடுத்தவனையும் தூங்க விடமாட்டான்.
பதிவு பற்றிய விவாதத்தை ஃபோனில் தொடர்ந்து கொள்கிறேன்...
// TBCD said...
திரையரங்குகளில் காலைத் தடவுபவர்களாலும், பேருந்துகளில் உரசுபவர்களாலும் பெரிய துயரமாக இருக்கின்றதாம். இருபால் உறவையும் தடை செய்துவிடுவோமா அண்ணாச்சி..
ஒரிணச்சேர்க்கையாளர்கள் என்றாலே பேருந்து பேருந்தாக அலைபவர்கள் என்ற ஒற்றை பரிமாணத்திலிருந்து வெளியே வாங்க அண்ணாச்சி! //
Point Taken.... :))))))))
கருத்துக்கு நன்றி TBCD !
// தமிழ்ப்பறவை said...
மகேஷ்... சீரியஸான பதிவாக இருக்கிறது. நல்ல பகிர்வு. //
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பரணி அண்ணா!
இது போன்ற தலைப்புக்களில் பேசினாலே நம்மையும் ஒரு மாதிரி பார்க்கத்தான் அனைவரும் தயாராய் இருக்கிறார்கள்..துணிச்சலான பதிவு..மகேஷ்
Post a Comment