May 10, 2010
April 28, 2010
கிரிப்டோக்ராஃபி
கிரிப்டோக்ராஃபி என்றால் தெரியுமல்லவா? தகவல்களை மறைத்துப் பரிமாற்றிக்கொள்ளும் முறை பற்றியப் படிப்பு. மறைத்து என்றால் சங்கேதங்களாக இருக்கலாம். குறியீடுகளாக இருக்கலாம், விக்கிரமாதித்தன் கதைகளிலோ அல்லது டான் ப்ரௌன் நாவல்களிலோ வருவது போல புதிர்களாகவும் இருக்கலாம். இன்றும் கிராமங்களில் ஜாடை பேசுவது என்று ஒரு வழக்கு உண்டு. வெளியாருக்குத் தெரியாத மாதிரி(சில சமயம் தெரியும் மாதிரியும்) வார்த்தைகளை அமைத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டும் புரியும் வண்ணம் பேசுவார்கள். இவற்றையெல்லாம் கிரிப்டோக்ராஃபியில் சேர்ப்பார்களா என்று தெரியவில்லை. ஆனால் கிரிப்டோக்ராஃபி என்று முறைப்படி வகைப்படுத்தியுள்ளது நான்காயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மெசபடோமிய எழுத்துக்கள் சிலவற்றை. எனது அபிப்ராயப்படி முதல் மனிதர்களான ஆதாம் ஏவாளுக்கு இடையூறாக மூன்றாவது மனிதன் வந்த அந்த கணத்தில் கிரிப்டோக்ராஃபி பிறந்திருக்க வேண்டும். :)
இந்தச் சங்கேதங்கள், குறியீடுகள் பற்றிய படிப்புக்கு ஆங்கிலத்தில் கிரிப்டாலஜி/கிரிப்டோக்ராஃபி என்றும் தமிழில் மறையீட்டியல் என்றும் பெயர். கிரிப்டோ(ரகசியமாக) என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து வந்தது தான் கிரிப்டோக்ராஃபி. இந்த ரகசியத் தகவல் பரிமாற்றத்தில் மூன்று நிலைகள் இருக்கின்றன. 1. என்கிரிப்ஷன் 2. ட்ரான்ஸ்மிஷன் 3. டிகிரிப்ஷன்.
நீங்கள் மறைக்க வேண்டிய தகவலை (Plain Text) யாருக்கும் புரியாத எழுத்துக்களாக(Cypher Text) மாற்றுவது என்கிரிப்ஷன். என்கிரிப்ட் செய்ய உப்யோகப்படுத்தப்படும் வழிமுறையை "கீ" என்பார்கள். ட்ரான்ஸ்மிஷன் என்பது மாற்றப்பட்ட செய்தியை உங்கள் பார்ட்னருக்கு அனுப்புவது. நமக்கு மிகவும் பழக்கப்பட்ட முறை புறாக்காலில் கட்டி அனுப்புவது. நிறைய அவகாசமிருந்தால் தெரிந்தவர்களின் தலையை மொட்டையடித்து, அதில் சைஃபர்டெக்ஸ்ட்டை பச்சை குத்தி முடி வளர்ந்த பிறகு கூட அனுப்பலாம்.
டிக்ரிப்ஷன் என்பது சைஃபர்டெக்ஸ்ட்டை உடைத்து அனுப்பப்பட்ட செய்தியைப் பெறுவது. பொதுவாக என்கிரிப்ட் செய்ய மற்றும் உடைக்க ஒரே "கீ" யை உபயோகிப்பார்கள்.
ரொம்பக் கஷ்டப்படுத்திக்கொள்ளாமல் சில என்கிரிப்ஷன் வகைகளைப் பார்ப்போம். மிக எளிய முறை பதிலீடு (Substitution). அதாவது ஒரு எழுத்துக்குப் பதில் குறிப்பிட்ட இன்னொரு எழுத்து.
உதாரணம். Army is In. இந்தச் செய்தியை dupblvlq என்று மாற்றலாம். எப்படியென்றால் Aக்கு பதில் மூன்று எழுத்து தள்ளி இருக்கும் d ஐ எழுதிக் கொள்ள வேண்டும். R க்கு பதில் u. இந்த மாதிரி.... இந்த முறையை அறிமுகப்படுத்தியவர் ஜூலியஸ் சீசர். செய்தியைப் பெறும் படைத்தளபதிக்கு இந்த முறை எத்தனை எழுத்துத் தள்ளியிருக்கிறது என்றுத் தெரிந்திருக்கும்.
இன்னொரு முறை:
உதாரணத்துக்கு உங்கள் காதலிக்கு Meet Me In Inox at three என்ற செய்தியை அனுப்புகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதனைக் கீழ்கண்டவாறு எழுதுங்கள். முதல் வரியில் முதல் ஐந்து எழுத்துக்கள். இரண்டாவது வரியில் அடுத்த ஐந்து.....
எழுதிய முறைக்கு மாறாக மேலிருந்து கீழாக படியுங்கள். Meoheixrenaetitemnt என்று வரும். அவ்வளவுதான். இதை உங்க்களுக்குத் தோதான ட்ரான்ஸ்மிஷன் முறையில் அனுப்புங்கள். பின் விளைவுகளுக்குக் கம்பெனி பொறுப்பல்ல.
பழங்காலத்தில் கிரிப்டோக்ராஃபி என்று பெரிதாக எதுவும் தேவைப்பட்டிருக்கவில்லை. நிறைய பேருக்கு எழுதப் படிக்கத் தெரியாததால், சாதாரண எழுத்துருக்களே போதுமானதாக இருந்தன. கல்வியறிவு வளர வளர, தகவல்களைப் பாதுகாப்பதில் அதிகக் கவனம் தேவைப்பட்டது. அப்போது ஆரம்பித்தது தான் கிரிப்டோக்ராஃபி. குறியீடுகள், கலைத்துப் போடப்பட்ட எழுத்துக்கள், ஒரு எழுத்துக்குப் பதில் மற்றொரு எழுத்து என மாற்றம் காண ஆரம்பித்தது இந்தத் துறை. ஒவ்வொரு என்கிரிப்ஷன் முறையும் வெகு சீக்கிரத்தில் காலாவதியாக ஆரம்பித்தது. அதுவும் கணிப்பொறியின் கண்டுபிடிப்புக்குப் பிறகு பெர்முடேஷன் காம்பினேஷன் முறை, மற்றும் புள்ளிவிவர (ப்ளைன்டெக்ஸ்ட் எந்த மொழி என்று தெரிந்தால் அந்த மொழியில் அதிகமாக சேர்ந்து வரும் எழுத்துக்களை வைத்து டிகிரிப்ட் செய்ய ஆகும் நேரத்தைக் குறைப்பது. உதாரணத்துக்கு ஆங்கிலம் என்றால் the, -ent, -nd இப்படி) அடிப்படையிலெல்லாம் சைஃபர்டெக்ஸ்ட் உடைக்கப்பட்டது அதனால் மிகச் சிக்கலான என்கிரிப்ஷன் முறைகள் தேவைப்பட்டன. இப்பொழுதெல்லாம் Bits, Bytes, Hexa Decimal என்று ரொம்பவே ஃபிலிம் காட்டுகிறார்கள்.
கிரிப்டோக்ராஃபியின் முக்கிய நோக்கம் தகவல் பாதுகாப்பு! தகவல் திருடப்படாமல் இருக்க உங்கள் மின்னஞ்சலை என்கிரிப்ட் செய்து அனுபுதல் முதற்கொண்டு பாஸ்வேர்டு, ஏ.டி.எம் பின் நம்பர், டிஜிட்டல் கையெழுத்து, பெறப்படும் தகவல் நடுவில் எங்க்கேயும் மாற்றப்பட்டதா என்று சரிபார்த்தல், அனுப்பியது இன்ன ஆள் தான் என்று சரிபார்த்தல் என்று கிரிப்டோக்ராஃபியின் பயன்பாடுகள் எராளம்.
இன்று பிரபலமான கிரிப்டோக்ராஃபி முறைகளில் சில SHA1 & Md5 என்றான் நண்பன். Md5 முறையில் "Karki is getting married Soon" என்ற வாக்கியத்தை என்கிரிப்ட் செய்தேன்.
bda25b3704807770ebf1de41e2461c41 என்று வருகிறது!
April 21, 2010
கிரையோஜெனிக்
சந்திரயான் – 1 எதிர்பார்த்த அளவு செயல்படாதது, கிரையோஜெனிக் – ஜி.எஸ்.எல்.வி தோல்வி போன்ற தொடர் நிகழ்வுகள், 2012 ல் சந்திரயான் – 2 திட்ட்த்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளன. சந்திரயான் 2, நிலவுக்கு மனிதனையனுப்பும் இந்தியாவின் திட்டம். ஆனால் திட்டமிட்டபடி சந்திரயான் – 2 நிலவுக்கு செலுத்தப்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவிப்பதாலும், 2011ல் விஜயகாந்த் முதல்வராகிவிட்டால் ராக்கெட் எஞ்ஜினுக்கே வேலையிருக்காது என்பதாலும் நாம் கவலையை விட்டுவிடலாம். கிரையோஜெனிக் எஞ்ஜின் பற்றிக் கொஞ்சம் பார்க்கலாம்.
கிரையோஜெனிக்ஸ் என்பது மிகக் குறைந்த வெப்ப நிலையில் உள்ள் பொருட்களின் தன்மையைப் பற்றிய படிப்பு. குறைந்த என்றால் -150 செல்சியஸுக்குக் கீழே. கிரையோஜெனிக்ஸ் படிப்பில் இவ்வளவு குறைந்த வெப்பநிலைகளை அளக்க செல்சியஸுக்குப் பதில் கெல்வின் என்ற அளவு பயன்படுகிறது (0 டிகிரி செல்சியஸ் = 273 கெல்வின்). இந்த வெப்பநிலையில் பொதுவாக அனைத்து வாயுக்களும் திரவமாகிப் போகின்றன. திரவ நிலையிலுள்ள இந்த வாயுக்கள் திடீரென்று விரிவாகி (ஆவியாகி) வாயு நிலைக்கு மாறும் போது கிடைக்கும் சக்தி அபரிமிதமானது. இந்த சக்தி தான் ராக்கெட்டை சுமார் 30,000 கி.மீ உயரம் வரை உந்தித் தள்ள உதவுகிறது(Thrust). கிரையோஜெனிக் இஞ்ஜின்கள் இந்தத் தொழில்நுட்பத்தில் தான் இயங்குகின்றன. இந்த இயந்திரங்களில் எரிபொருளாக இருப்பவை திரவ ஹைட்ரஜன் (LH2) மற்றும் திரவ ஆக்சிஜன்(LOX). இந்தத் திரவங்கள் எப்படி வாயுநிலைக்கு மாறுகின்றன, எவ்வளவு சக்தி கிடைக்கிறது என்பதெல்லாம் ரொம்ப சயன்ஸ் என்பதால் விட்டுவிடலாம்.
நமது ஜி.எஸ்.எல்.வியைப் பார்ப்போம். ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் செலுத்துதலில் மூன்று நிலைகள் உள்ளன. முதல் நிலையில் திட எரிபொருளும், இரண்டாவது நிலையில் திரவ எரிபொருளும் பயன்படுகின்றன. இரு நிலைகளில் சுமார் 130 கி.மீ உயரம் வரை செலுத்தப்படுகிறது. அதன் பிறகு கிரையோஜெனிக் இயந்திரம் இயங்க வேண்டும். முதல் இரு நிலைகளை வெற்றிகரமாகக் கடந்த ஜி.எஸ்.எல்.வி மூன்றாவது நிலையில் தோல்வியுற்றது. கிரையோஜெனிக் எஞ்ஜின் இயங்க ஆரம்பிக்கவேயில்லை. சோதனைகளில் நமது கிரையோஜெனிக் இயந்திரங்கள் வெற்றிகரமாக இயங்கியிருந்தாலும், விண்வெளியில், 130 கி.மீ உயரத்தில் இயக்குவது பெரும் சவால் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இந்தியா கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தில் இறங்கியதன் பின்னணியில் வழக்கம்போல அமெரிக்காவே இருக்கிறது. 90 களில் இந்திய-ரஷ்ய ஒப்பந்தம் மூலம் இந்தியாவுக்குக் கிடைக்கவிருந்த இந்தத் தொழில்நுட்பம், அமெரிக்காவின் தலையீட்டால் கிடைக்காமல் போனது. அமெரிக்கா இதற்குச் சொன்ன காரணம் “இந்தியா இந்த்த் தொழில்நுட்பத்தை ஏவுகணைகளைத் தயாரிக்கப் பயன்படுத்தக்கூடும்” என்பது. அதனால் சொந்தமாக இந்த்த் தொழில்நுட்பத்தில் தன்னிறைவு அடையும் முயற்சி ஆரம்பிக்கப்பட்ட்து. அன்று ஆரம்பித்தப் பயணத்தின் ஒரு படிக்கட்டு இந்த்த் தோல்வி. படிக்கட்டு மட்டுமே. ஏனெனில், இன்னும் ஒரு வருட்த்தில் மீண்டும் ஒரு முறை ஜி.எஸ்.எல்.வி செலுத்தப்படுமாம்! With More Brilliance, With More Excellence! All the Best!
March 11, 2010
ஈ.எஸ்.பி
ஏதாவது ஒரு ரெஸ்டரண்டில் நண்பனுடன் அமர்ந்திருப்பீர்கள். லேவண்டர் கலர் சுடிதாரணிந்த சொர்க்கம் ஒன்று புன்னகைத்தபடி உங்கள் இருக்கையைக் கடந்து போகும். "அட, இது மாதிரி ஏற்கெனவே நடந்த மாதிரி இருக்கே" என வியப்பீர்கள். அல்லது "இந்த மாதிரி நடக்கும் என ஏற்கெனவே எனக்குத் தோன்றியிருக்கிறது" என சந்தோஷப்படுவீர்கள். உங்கள் நண்பர் கூட "ஒருவேளை உனக்கு ஈ.எஸ்.பி (Extrasensory perception) இருக்கும்" என உற்சாகப்படுத்துவது போல கலாய்த்திருப்பார். இது மாதிரி நடப்பதற்குக் காரணம் நம் மூளை ஒரே காட்சியை இரண்டு முறை பெறுவது தானாம். வழக்கமாக, ஒரு காட்சியை இரண்டு கண்களும் ஒரே சமயத்தில் மூளைக்கு அனுப்புகின்றன.இரு கண்களுக்குமிடையே Co-Ordination இல்லாத சில நேரங்களில், அனுப்பப்படும் இரு காட்சிகளுக்கிடையே மில்லி செகண்ட்கள் வித்தியாசம் இருக்கும். உதாரணத்துக்கு, அந்த சுடிதார் சொர்க்கம் ஒரு கண் மூலமாக ஏற்கெனவே மூளைக்குச் சென்று பதிவாகியிருக்கும். சில மில்லி செகண்ட்கள் கழித்து அதே காட்சி மூளைக்கு மறுபடியும் போகும். ஏற்கெனவே நினைவில் பதிவாகியிருக்கும் அந்தக் காட்சித் திரும்பவும் மூளைக்குக் கிடைப்பதால் தான் இப்படித் தோன்றுகிறதாம்.
இன்னொரு வகை Co-Ordination பிரச்சனை இருக்கிறது. தூக்கத்திலிருந்து கண்விழித்ததும் கை கால்களை அசைக்க முடியாமல் மிரண்ட அனுபவம் நம்மில் நிறைய பேருக்கு இருக்கும். பொதுவாக நாம் தூங்கும் போது நம் கை கால்கள் செயலிழக்கச் செய்யப்படுகின்றன(sleep paralysis). கனவுகளுக்கு React செய்யாமல் இருப்பதற்குத்தான் இந்த ஏற்பாடு. தூக்கம் தெளிந்தவுடன், சரியாகச் சொல்வதென்றால் கான்ஷியஸ் வந்தவுடன், கை கால்கள் இனி அசையலாம் என்று மூளையிடமிருந்து சிக்னல் கிடைக்கும். சில நேரங்களில் கான்ஷியஸ் வந்தும் உடலுக்கு சிக்னல் கிடைக்காமல் இருக்கும். அந்த சமயங்களில் தான் அசைய நினைத்தாலும் அசைய முடியாமல் திணறியிருப்போம். மிரட்டும் உருவங்கள், அமானுஷ்ய ஒலி, கையைக் காலை யாரோ பிடித்து அமுக்குகிறார்கள் என்னும் புகார்களெல்லாம் இதனால் தான்.
அட.... ஈ.எஸ்.பி என ஆரம்பித்து வேறு எங்கோ போகிறது. ஈ.எஸ்.பி (Extra Sensory Perception) என்பதைச் சாதாரண புலன்களுக்குச் சாத்தியப்படாத உணர்ச்சிகளை உணர்தல்(!) எனச் சொல்லலாம். இந்த மாதிரி அறிவியலுக்கு அப்பாற்பட்டதை பாராநார்மல் என்று சொல்வார்கள். அனைவருக்கும் தெரிந்த ஒரு வகை எதிர்காலத்தைக் கணிப்பது. இன்னும் சில வகைகள் இருக்கின்றன. டெலிபதி, தொலைவில் நடக்கும் விஷயத்தை அறிவது, ஆவிகளுடன் சவகாசம் வைத்திருப்பது(சிக்ஸ்த் சென்ஸ் நினைவிருக்கிறதா?), ஒரு பொருளை வைத்துக்கொண்டே ஒரு ஆளைப் பற்றிக் கணிப்பது(Psychometry). ஒரு பொருளை உருவம் மாற்றுவது கூட ஈ.எஸ்.பி தான்.
இன்னொரு வகை Co-Ordination பிரச்சனை இருக்கிறது. தூக்கத்திலிருந்து கண்விழித்ததும் கை கால்களை அசைக்க முடியாமல் மிரண்ட அனுபவம் நம்மில் நிறைய பேருக்கு இருக்கும். பொதுவாக நாம் தூங்கும் போது நம் கை கால்கள் செயலிழக்கச் செய்யப்படுகின்றன(sleep paralysis). கனவுகளுக்கு React செய்யாமல் இருப்பதற்குத்தான் இந்த ஏற்பாடு. தூக்கம் தெளிந்தவுடன், சரியாகச் சொல்வதென்றால் கான்ஷியஸ் வந்தவுடன், கை கால்கள் இனி அசையலாம் என்று மூளையிடமிருந்து சிக்னல் கிடைக்கும். சில நேரங்களில் கான்ஷியஸ் வந்தும் உடலுக்கு சிக்னல் கிடைக்காமல் இருக்கும். அந்த சமயங்களில் தான் அசைய நினைத்தாலும் அசைய முடியாமல் திணறியிருப்போம். மிரட்டும் உருவங்கள், அமானுஷ்ய ஒலி, கையைக் காலை யாரோ பிடித்து அமுக்குகிறார்கள் என்னும் புகார்களெல்லாம் இதனால் தான்.
அட.... ஈ.எஸ்.பி என ஆரம்பித்து வேறு எங்கோ போகிறது. ஈ.எஸ்.பி (Extra Sensory Perception) என்பதைச் சாதாரண புலன்களுக்குச் சாத்தியப்படாத உணர்ச்சிகளை உணர்தல்(!) எனச் சொல்லலாம். இந்த மாதிரி அறிவியலுக்கு அப்பாற்பட்டதை பாராநார்மல் என்று சொல்வார்கள். அனைவருக்கும் தெரிந்த ஒரு வகை எதிர்காலத்தைக் கணிப்பது. இன்னும் சில வகைகள் இருக்கின்றன. டெலிபதி, தொலைவில் நடக்கும் விஷயத்தை அறிவது, ஆவிகளுடன் சவகாசம் வைத்திருப்பது(சிக்ஸ்த் சென்ஸ் நினைவிருக்கிறதா?), ஒரு பொருளை வைத்துக்கொண்டே ஒரு ஆளைப் பற்றிக் கணிப்பது(Psychometry). ஒரு பொருளை உருவம் மாற்றுவது கூட ஈ.எஸ்.பி தான்.
இந்த ஈ.எஸ்.பி பற்றிய ஒரு தியரி பின்வருமாறு கூறுகிறது. அனைவருக்கும் ஆழ்மனதில் ஈ.எஸ்.பி சக்தி/உணர்ச்சி இருக்கிறது. ஆழ்மனது வெளி உலகுடன் தொடர்பு கொள்ளும் போது தான் புற மனதுக்குத் தெரிகிறது. அது வரை இந்த உணர்ச்சி அறியப்படாமலே போய் விடுகிறது. அதாவது எல்லோருக்குமே ஈ.எஸ்.பி திறன் இருக்கிறது. ஆனால் பெரும்பாலானவர்களுக்கு அதை அறியும் சந்தர்ப்பம் வாய்ப்பதில்லை. இது ஒரு சாம்பிள் தான். நிறைய தியரிகள் வந்துவிட்டன. ஈ.எஸ்.பி எங்கு ஏற்படுகின்றது என ஒன்று, இரண்டு ஆழ்மனங்கள் உள்ளன என ஒன்று.. இப்படி நிறைய!
ஆனால் அறிவியலைப் பொறுத்தவரை ,ஈ.எஸ்.பி விஷயத்தில் குழப்பமான நிலையே நீடிக்கிறது. ஏனெனில் அறிவியலில் எல்லாமே டெஸ்ட் கேஸ் தான். எல்லாவற்றிலும் பாஸ் செய்தாக வேண்டும். சுஜாதா அவர்களின் வார்த்தையில் சொல்வதென்றால், ராமசாமிக்கு ஈ.எஸ்.பி இருக்கிறதென்றால் அதே தெருவில் வசிக்கும் குப்புசாமிக்கும் ஈ.எஸ்.பி இருக்கவேண்டும். விஞ்ஞானம் நம்பாவிட்டாலும் போலீஸ் ஈ.எஸ்.பியை நம்புகிறது போல! நிறைய கேஸ்களில் ஈ.எஸ்.பி குற்றவாளியை நெருங்க உதவியிருக்கிறதாம்.
நித்யானந்தருக்கு ஈ.எஸ்.பி இருந்திருந்தால் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பார்?
February 22, 2010
ஸ்னேஏஏக் பாபு!
அண்ணனைப் பாம்பு கடித்துவிட்டது. மரவள்ளிக்கிழங்குக் காட்டுக்குத் தண்ணீர் பாய்ச்சுகையில் கடித்துவிட்டு ஓடிவிட்டது. என்ன பாம்பு என்று கண்டுபிடிக்க முடியவில்லை. நான்கு நாள் மருத்துவமனையில் இருந்தார். இப்போது விஷம் முறிந்து வீடு திரும்பியிருக்கிறார். இந்த மாதிரி தருணங்களில், நோயாளியை விசாரிக்கிறேன் பேர்வழி என அந்தந்த வீடுகளில் கூட்டம் கூடிவிடுவார்கள். இரவு பதினொரு மணி வரை அரட்டைக்கச்சேரி தான். பாம்புக்கடியை விசாரிக்க வந்தால் பாம்புகள் பற்றி அலசி ஆராய்வார்கள். பேசும் ஆட்களுக்குத் தகுந்த மாதிரி விஷயங்கள் இருக்கும். ஆனால் பேசுவது என்னவோ பாம்புகளைப் பற்றித்தான். ஆண்கள் பொதுவாகத் தங்கள் வீரதீரச் செயல் பற்றி அள்ளி விடுவார்கள். "அங்க அந்த பாம்பு அடிச்சேன், இங்க இந்த பாம்பு அடிச்சேன்" என்று ஒரே ரணகளம் தான். பெண்கள் எல்லாம் பாம்பு பார்த்து பயந்த கதைகள். "வைக்கப்போருக்கடிய பாம்ப பாத்துட்டு அவுங்கள கூப்புட்றக்குள்ள ஓடிப்போச்சுக்கா" இந்த தினுசில். பாட்டிகள் குழுவில் தான் பாம்புகளின் அதிசய சக்திகள், நாகமாணிக்கம் என அமானுஷ்யம் பேசுவார்கள். நாகமாணிக்கம் எடுக்கும் முறையை ஒரு நூறு முறை பேசியிருப்பார்கள். பாம்பைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டால் ஒன்றும் செய்யாது என்கிற ரீதியில் தான் பேச்சு இருக்கும். என்னை மாதிரி குழந்தைகளோ(ம்க்கும்!) ஆச்சரியாமாக அவற்றைக் கேட்டுக்கொண்டிருப்போம்!
கிராமப்புறங்களில் வாழ்க்கை அதுவும் விவசாயிகளின் வாழ்க்கை பாம்புகளோடு இயைந்தது. மாதத்துக்கு மூன்று முறையேனும் பாம்பு அடிக்க வேண்டியிருக்கும். அதே மாதிரி பாம்புகள் பற்றியக் கதைகளுக்கும் பஞ்சமில்லை. பெரியப்பா பாம்பு அடிப்பதில் கில்லாடி. ஆனால் அவரையே கதிகலங்கச் செய்த பாம்பு ஒன்று இருக்கிறது(இருந்தது?). வண்டிச்சாலையில் பரண் மீது தான் கோழி அடையும். அங்கு நுழைந்த பாம்பு முட்டைகளையெல்லாம் குடித்துக்கொண்டு சுகஜீவனம் நடத்தி வந்திருக்கிறது. ஒரு நாள் முட்டை எடுக்க பரண் மீதேறிய பெரியப்பா அலறியடித்துக்கொண்டு இறங்கினார். பாம்பு ஒன்று கண் அருகில் சீறியதாம். பின் ஜமா சேர்த்துப் பரணைப் பிரித்து அந்தப் பாம்பை அடித்துவிட்டார்கள். கருநாகம். ஆறடிக்கு இருந்தது. முட்டையை விழுங்கியிருந்ததால் அசையமுடியவில்லை. அதனால் பெரியப்பா தப்பினார். இன்றும் அதைப் பற்றிப் பேசினால் சிலிர்க்கும் அவருக்கு. இன்னொரு கதை பாம்பு ஒன்றைக் கொத்தியே சாகடித்த நான்கு வான்கோழிகள் பற்றியது. இது மாதிரி நிறைய சம்பவங்களும் கதைகளும் பெரிய அளவில் பேசப்படும்.
ஊரைப் பொறுத்தமட்டில், பாம்புகள் இம்சையானவை என்றாலும் பேசுவதற்கு சுவாரஸ்யமானவை. நாகப்பாம்புகள் தெய்வங்கள் என்ற நம்பிக்கை எங்கள் ஊரிலும் உண்டு. ஆனால் எல்லா ஊரிலும் போல எங்கள் ஊரில் பாம்புப்புற்றுக்கு யாரும் பால் வார்ப்பதில்லை. ரத்தம் தான். கோழி அறுத்து தலையைப் படைப்பார்கள். மீதி வழக்கம் போல நமக்குத்தான். ஆனால் சிக்கிவிட்டால் நாகப்பாம்பும் பரலோகம் போகவேண்டியதுதான். அவற்றுக்கு மட்டும் இறுதி மரியாதை செய்து எரிப்பார்கள். தெய்வமாச்சே!.
எப்பொழுது பாம்புகள் பற்றி பேச ஆரம்பித்தாலும், நமச்சிவாயக்கவுண்டரைப் பற்றி பேசிவிட்டுத்தான் சபையைக் கலைப்பார்கள். அவர் பாம்புக் கடிக்கு திருநீறு போடுவார். விஷக்கடிக்கு அவர் வீட்டுக்குப் போய் நீறு போட்டுக்கொண்டால் போதும் என்பது நம்பிக்கை. நான்கைந்து வருடங்களுக்கு முன் வரை நானறிய யாரும் மருத்துவமனைகளைத் தேடிப்போனதில்லை. எவ்வளவு மோசமான நிலையிலும் அவர் போடும் நீறு தான் மருந்து. மயங்கிக்கிடந்தவர்கள் கூட நீறு போட்டதும் எழுந்துவிடுவதை நிறைய முறைகள் பார்த்திருக்கிறேன். ஆனால் ஏனோ சில மனக்கசப்புகளால் நீறு போடுவதை நிறுத்திவிட்டார். அதன் பிறகு தான் மருத்துவமனை. ஆனால் அவர் நீறு போடுவது இன்னும் வியப்பாகத்தான் இருக்கிறது. எங்கள் ஊர் பாம்புகளுக்கு விஷம் இல்லையா? அல்லது இவர் நீறு போட்டால் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை தான் குணப்படுத்துகிறதா என்றெல்லாம் கூடத் தோன்றியிருக்கிறது(பாழாய்ப்போன படிப்பு இந்த மாதிரியான விஷயங்களை நம்ப மறுக்கிறதே). ஆனாலும் ஆராய விருப்பமில்லை. அவர் நீறு கொடுத்தார், குணமானது என்பதே போதுமாயிருக்கிறது.
February 20, 2010
அண்ணா ஹாக்கி லீக்
இந்த வருடம் அண்ணா ஹாக்கி லீக் ( சுருக்கமாக AHL) பிப்ரவரி 22 ஆம் தேதி தொடங்கி ஒரு மாதம் வரை நடக்க இருக்கிறது. அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து நடத்தும் இந்தப் போட்டி, நமது தேசிய விளையாட்டான ஹாக்கியின் பக்கம் ரசிகர்களின் ஆர்வத்தைக் கவரும்(நிலைமையைப் பார்த்தீர்களா?) ஒரு சிறு முயற்சி.
ஹாக்கியில் இந்தியா வல்லரசு என்பதெல்லாம் பழங்கதை. அணித் தேர்வில் விளையாடிய பணம்,வீரர்களின் அதிருப்தி, விளையாட்டை ஊக்குவிப்பதில் அரசு காட்டிய மெத்தனப்போக்கு எல்லாம் சேர்ந்து அணியைப் பலவீனமாக்கின. இதெல்லாம் விட முக்கியக் காரணம் நமது ஆர்வம். உள்ளூர் கிரிக்கெட் போட்டிக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைக் கூட உலகக் கோப்பை ஹாக்கிக்குத் தருவதில்லை. எல்லாம் சேர்ந்து ஹாக்கியை பழங்கதையாக மாற்றிவிட்டன. இந்தியாவின் தேசிய விளையாட்டு என்ற அந்தஸ்தை கிட்டத்தட்ட கிரிக்கெட் எடுத்துக்கொண்ட இந்த நிலையில், ஹாக்கியைப் பிரபலப்படுத்தும் இந்த முயற்சி பாராட்டுக்குரியது
இனி AHL! 2008 ஆம் ஆண்டு பயணத்தைத் தொடங்கிய AHL போட்டிகளுக்கு இது மூன்றாம் ஆண்டு. முதல் வருடம் பல்கலைக்கழக மாணவர்களை மட்டும் கொண்ட நான்கு அணிகளுடன் நடத்தப்பட்ட இந்தப் போட்டியில் இப்பொழுது எம்.ஐ.டி மற்றும் வேலம்மாள் கல்லூரி அணிகளும், இன்ஃபோசில் மற்றும் சி.டி.எஸ் மென்பொருள் நிறுவனங்களைச் சேர்ந்த அணிகளும் பங்குபெறுகின்றன.வரும் வருடங்களில் மேலும் பல அணிகள் பங்குபெறும் என நம்புவோம்.
பார்வையாளர்களுக்கும் பரிசுகள் உண்டு. ஆட்டத்தின் முதல் பாதி முடிந்ததும் வெற்றி பெறப்போகும் அணியைச் சரியாகக் கணிப்பவர்களுக்கு, பெனால்டி மூலம் கோல் செய்யும் பார்வையாளர்களுக்கு என பரிசுகள் காத்திருக்கின்றன.
எங்கே : அண்ணா பல்கலைக் கழக மைதானம்.
எங்கே : அண்ணா பல்கலைக் கழக மைதானம்.
எப்போது : பிப்ரவரி 22 முதல்.
நான் போறேன்!.
டிஸ்கி : 2010 பிப் 28 முதல் மார்ச் 13 வரை டெல்லியில் ஆடவர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டிகள் நடக்க இருக்கின்றன. தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பது வேறு விஷயம்!
February 10, 2010
அரட்டை - 10-2-2010
காலம் கடந்து கிடைக்கும் உதவி வீண் என எங்கோ படித்தது. அது நீதிக்கும் பொருந்தும். பத்து வருடம், பதினான்கு வருடம் என வழக்குகள் இழுத்தடிக்கப்பட்டால், பாதிக்கப்பட்டவர்களின் மனநிலை எப்படியிருக்கும்? உதாரணத்துக்கு ருசிகா வழக்கு. 90களில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி தற்கொலை செய்து கொண்ட டென்னிஸ் வீராங்கனை. குற்றம் சாட்டப்பட்டவர் ரத்தோர். பத்தொன்பது ஆண்டுகள் கழித்து அவருக்குக் கிடைத்த தண்டனை ஆறு மாதம் சிறை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம். இதை விட அந்தப்பெண்ணின் தகப்பனை வேறு விதமாக அசிங்கப்படுத்த முடியாது. இன்னும் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது. ரத்தோர் குற்றமற்றவர் என்று கூட நிரூபிக்கப்படலாம் யாருக்குத் தெரியும். அப்புறம், கசாப் என்ற தியாகி ஒருவரைப் பராமரித்து வருகிறோமே. அந்த வழக்கு என்ன ஆகப் போகிறதோ தெரியவில்லை. தமிழ்நாட்டில், சங்கரராமன் கொலை வழக்கு. எல்லா சாட்சிகளும் பல்டி அடித்தாகி விட்டது. அடுத்தது என்ன? வழக்கு தள்ளுபடி. "ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம், ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது" என்பதில் பின்பாதி சரி தான். ஆனால் ஓராயிரம் குற்றவாளிகள் தப்பித்தால் என்ன ஆவது? தப்பித்துக்கொள்ளாலாம் என குற்றங்கள் பெருகாதா? தார்மீக அடிப்படையில் பார்த்தால் கூட பாதிக்கப்பட்டவருக்கு விரைந்து நீதி கிடைக்க வேண்டாமா? வயசாகிப்போன நீதித்துறை!!!!!!!!
{}
முதல்வர் கலைஞருக்கு ஐநூற்றுச் சொச்சமாவது தடவையாக தமிழ்த்திரையுலகினர் எடுத்த பாராட்டு விழாவில் அஜித் மனம் திறந்து குமுறியிருக்கிறார். இந்த மாதிரி விழாக்களுக்கு வரச்சொல்லி நடிகர்கள் மிரட்டப்படுவதாகப் புலம்பியிருக்கிறார். இது வேறா?
அவர் வாரி வழங்குவதும், இவர்கள் விழா எடுப்பதுமாக வருடம் முழுக்க ஒரே கோலாகலம் தான். ஏதோ நல்லா இருந்தா சரி. மற்ற துறையெல்லாம் செழிப்பாக இருக்கிறது தமிழ்நாட்டில். பாவம் சினிமாத்துறை மட்டும் நொடித்துப்போய்விட்டது. நடக்கட்டும் நடக்கட்டும்
{}
கோவா பார்த்தாகிவிட்டது. ஒரு வெளிநாட்டுக்காரியைப் பார்த்து மணம் முடிக்கும் லட்சியம் கொண்ட மூன்று இளைஞர்களின் கதை. (சிங்காரவேலன் கவுண்டமணி நினைவுக்கு வந்தார் : இதுவல்லவோ லட்சியம்....). படம் ஒவ்வொருக் காட்சியும் இளமைத்துள்ளல்(அட, அது இல்லீங்க!). சம்பத்,அர்விந்த் காதல் அளப்பறை. தில்லு தான் ரெண்டு பேருக்கும். தனித்தனிக் காட்சிகளாகப் பார்க்கும்போது வசீகரிக்கும் படம் மொத்தமாகப் பார்க்கும்போது அவ்வளவாகக் கவரவில்லை. .
{}
வலையுலகின் காதல் மன்னன் கார்க்கி' காதல் வாரம் கொண்டாடுகிறார். 'கார்ப்பரேட் கம்பர் நர்சிம்' காதலுக்காக சிலப்பதிகாரம் வரைச் சென்று காதலியின் அழகைப் பாட ஐடியா தருகிறார். ஆதி அவர்கள் ஒரு படி மேலே போய் தங்கமணி ஸ்பெஷல் என பதிவு போடுகிறார். இப்படி ஆளாளுக்குக் காதலைக் கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள். நம் பங்குக்கு ஏதாவது செய்யாவிட்டால் எப்படி?
எஸ்.எம்.எஸ்ஸில் வந்தது.
துன்பத்திலும் ஒரு இன்பம்.
என்னவளின் திருமணத்துக்கு வந்த
அவள் தோழிகள்!
What a Figures What a Figures....
நீதி : திரிஷா கிடைக்கலைன்னா திவ்யா!
February 06, 2010
Visual Treat... மெரீனா.
புத்தம்புது காலை...
கடலின் அக்கறை போனோரே...
சமீபத்தில் நான் எடுத்த புகைப்படங்கள் இவை. நல்லா இருக்கான்னு பார்த்து சொல்லுங்க. Subject, Composition, Focus, Post-processing etc. etc. குறித்த உங்கள் விமர்சனங்கள் இம்ப்ரூவ் செய்துகொள்ள உதவும். பச்ச புள்ள சாமி... பார்த்து போட்டுக்கொடுங்க. (நல்லா இல்லைன்னு சொன்னா காசு வெட்டிப்போடப்படும்.)
கடலின் அக்கறை போனோரே...
அந்த நீல நதிக்கரையோரம்....
நம்ம மெரீனா தான்.
சமீபத்தில் நான் எடுத்த புகைப்படங்கள் இவை. நல்லா இருக்கான்னு பார்த்து சொல்லுங்க. Subject, Composition, Focus, Post-processing etc. etc. குறித்த உங்கள் விமர்சனங்கள் இம்ப்ரூவ் செய்துகொள்ள உதவும். பச்ச புள்ள சாமி... பார்த்து போட்டுக்கொடுங்க. (நல்லா இல்லைன்னு சொன்னா காசு வெட்டிப்போடப்படும்.)
January 17, 2010
ஆயிரத்தில் ஒருவன்
ஸ்டில்ஸ், பாடல்கள், ட்ரெய்லர் என ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளைக் கிளப்பிய படம். அந்த எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்திருக்கிறதா என்றால் சொல்லத் தெரியவில்லை. என்னைக் கேட்டால் "Maybe yes!". நாடுகடந்து போன சோழர் பரம்பரை, பாண்டியர்களின் வன்மம், தொல்பொருள் ஆராய்ச்சி எனத் தமிழ் சினிமா அதிகம் கண்டிராத கதைக்களம். பிரம்மிப்பாக சொல்லியிருக்கிறார்கள். ஆனால் சில இடங்களில் சொதப்பலாக.
800 வருடங்களுக்கு முன் நாடுகடந்து தலைமறைவாகும் சோழர்கள் வியட்னாம் அருகில் ஒரு தீவில் தஞ்சமடைகிறார்கள். போகும்போது பாண்டியர்களின் சிலை ஒன்றைத் தள்ளிக்கொண்டு போகிறார்கள். பாண்டியர்கள் பின்தொடர்ந்து வராமலிருக்க ஏழு பொறிகளை(Traps) ஏற்படுத்திவிட்டுப் போகிறார்கள். 800 வருடங்கள் கழித்து, இன்றும் அந்த சோழ இளவரசன் தஞ்சமடைந்த இடம் தேடப்படுகிறது. அந்த இடத்தைத் தேடப்போகும் பிரதாப் போத்தன் காணாமற்போய்விடுகிறார். அவரையும், அந்த இடம் மற்றும் சிலையையும் தேடிக்கொண்டு ஆர்க்கியாலஜி டிப்பார்ட்மென்ட் ஹெட் ரீமாசென் தலைமையில் குழு ஒன்று கிளம்புகிறது. குழுவில் பிரதாப் மகள் ஆன்ட்ரியா, ஹெல்ப்பராக கார்த்தி ஆகியோர் இடம்பெறுகிறார்கள். ஏழு தடைகளைத் தாண்டி அந்த இடத்தை அடையும் போது, பார்த்திபன் தலைமையில் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கும் சோழர்களைக் கண்டுபிடிக்கிறார்கள். இடைவேளை!
சும்மா சொல்லக்கூடாது. முதல் பாதி ராக்கெட் வேகம். இதுவரை சொன்னதெல்லாம் முதல் பாதி தான். சில விஷூவல் மொக்கைகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் நன்றாகவேயிருக்கிறது. விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லை. சோழர்களைப் பார்த்தவுடன் ஒரு ட்விஸ்ட். அப்புறம் வேகம் குறைந்து விடுகிறது. ஆனாலும் கடைசி வரை ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. இடைவேளைக்குப் பின் எல்லோரும் தமிழில்(!) பேசுகிறார்கள்.
இரண்டாம் பாதி முழுக்க ஒரே கூச்சலாக இருக்கிறது. மக்கள் அல்லது போர். சண்டைக்காட்சிகளின் நேரத்தைக் குறைத்து கொஞ்சம் சத்தத்தையும் குறைத்திருந்தால் கூட போதும். இரண்டாம் பாதி வேகமெடுத்திருக்கும். முக்கியமாக அந்த கிளாடியேட்டர் ரக சண்டைக்காட்சி. December 28, 2009
சுப்பிரமணீஈஈஈஈஈஈஈ....
ஊருக்குப் போயிருந்த போது, புதிதாக வாங்கி வந்திருந்த நாய்க்குட்டிக்கு நாலைந்து செங்குளவிகளைப் பிடித்து அரைத்துப் பாலில் கலந்து கொடுத்துக்கொண்டிருந்தார் பாட்டி. செங்குளவி பால்(!) குடித்தால் நாய் சத்தமாகவும், ஆக்ரோஷமாகவும் குரைக்கும் என்பது ஐதீகம். நாய்க்குட்டிகளின் மெனு பீஃப் பிரியாணி, கருவாடு, ரத்தம் என்று நீளும்.
ஊரில் ஒரு வீட்டுக்கும் மற்றொரு வீட்டுக்கும் சராசரியாக 200 மீட்டர் தூரம் இருக்கும். எல்லோருக்கும் அவரவர் வயலுக்குள் வீடு. பாதுகாப்புக் காரணங்களுக்காக, நாய் குரைப்பது மூன்று வீடுகளுக்காவது கேட்க வேண்டும்! அதற்காகத் தான் இந்தக் கொலைவெறி மெனு. நாயின் குரைப்புச் சத்தத்தை வைத்து கூட அதன் ஓனர் புகழப்படுவதால் நாய்க்கு தனி கவனிப்பு இருக்கும். வீட்டில் இருப்பவர்கள் பழைய சாதம் சாப்பிட்டாலும் நாய்க்கு விருந்து தான்.
வீட்டுக் காவலுக்கு இரண்டு, பட்டிக் காவலுக்கு ஒன்று என எங்கள் வீட்டில் மூன்று நாய்கள் இருந்தன. வயல்வெளி பக்கத்திலிருப்பதால் பாம்புகளெல்லாம் சர்வசாதாரணமாக வாசல் வரை வந்து போகும். அவற்றிலிருந்தெல்லாம் காப்பாற்றுவது நாய்கள் தான். வாசல் ஏறவிடாமல் குரைத்துக்கொண்டே நிறுத்திவைக்கும். பகலில் கட்டிப்போடப்பட்டிருக்கும் நாய்கள் இரவில் அவிழ்த்துப்படுகின்றன. அதனாலேயே இரவில் வீட்டுக்குச் சொந்தக்காரர்கள் கூட வருவதில்லை.
பொதுவாகவே ஊரில் நாய்களுக்கு மணி என்று தான் பெயர் வைப்பார்கள். சில நாய்களுக்கு அதுவும் இல்லை. கூப்பிடுவதென்றால் "கூச் கூச்" என்று கத்த வேண்டியது தான். இப்போது தான் ஜானி, டாமி என்கிற அளவுக்கு வந்திருக்கிறது. மூன்றாம் பிறை படம் பார்த்த என் தாத்தா "சுப்பிரமணி" என்று நாய்க்கு பெயர் வைக்க ஆசைப்பட்டிருக்கிறார். பக்கத்துக் காட்டுக்காரர் பெயரும் அதே தான் என்பதால் அந்த பெயர் கைவிடப்பட்டது.
பாம்புக்குக் கூட பயப்படாத அஞ்சா நெஞ்சன் நாய்கள், சின்ன விஷயத்துக்கெல்லாம் பயப்படும். எங்கள் மணிக்கு பட்டாசுச் சத்தமென்றால் அப்படியொரு பயம். வைக்கோல் போருக்குள் புகுந்துகொண்டு கப்சிப்! இரண்டு நாய்கள் எனிமீஸ் ஆக இருந்தால் கூட பிரச்சனையில்லை. ஒன்று சேர்ந்துவிட்டால் விளையாடுகிறோம் பேர்வழி என வெள்ளாமைக் காட்டையெல்லாம் துவம்சம் செய்துவிடும்.
டிஸ்கி : ஊரில் அனைவரும் லேடீஸ் நாய் வளர்ப்பதைத் தவிர்ப்பதால், ஜென்ட்ஸ் நாய்க்கெல்லாம் சங்கடம் தான். எப்போதாவது வழி தவறி ஊருக்குள் வரும் லேடீஸ் பப்பிக்கள் நிலைமை தான் பாவம்!













